151
கம்பித்துண்டு. இதனைத் தரையில் இரு முனைகளுகிடையே விறைப்பாகப் பிடித்துக் கொண்டு இந்தக் கோடு போடப்படுகிறது. இந்தக் கம்பியை நடுவில் பிடித்து ஒரு நொடிப்பு நொடித்துத் தரையில் படிய வைத்தால் தரையில் ஒரு கோடு படியும்
chalk over-lay : அச்சுப் படிவம் : அச்சுப்படியெடுப்பதற்காக அச்சுத் தகடுகளையும், அச்செழுத்துகளையும் ஒரு வழவழப்பான பரப்பில் படிய வைப்பதற்கான ஒர் எந்திரவியல் செய்முறை
Chalk plate : சுண்ணத்தகடு : செய்தியிதழ் பணியில் பயன்படுத்துவதற்காகப் பவளத் தகட்டு அச்சிடுவோரால் வார்த்தெடுக்கப்படும் ஒருவகைத் தகடு
Chamber : உட்புழை : உட்புழையுள்ள ஒரு தோரனி அல்லது வார்ப்படம். ஒரு நீண்ட உள்ளிடம்
Chamber : கண்ணறை : மேல் வளைவுடைய கண்ணறை
chamois leather : மான் தோல் : ஆட்டின் இயல்புடைய ஐரோப்பிய வரை மானின் மென்பதமுடைய தோல்வகை
Chandelle : திடீர்த் திருப்ப ஏற்றம் : விமானம் திடீரெனத் திரும்பி உயரத்தில் ஏறுதல். ஒரே சமயத்தில் திசை திருப்பி உயரத்தில் ஏறுவதற்கு இந்த நுட்பம் பயன்படுத் தப்படுகிறது
Change gears : நிலைமாற்றுப் பல்லிணைகள் : உந்து வண்டியிலுள்ள விசை ஊடிணைப்புச் சாதனம். கடைசல் எந்திரத்தில் திருகின் இழைகளை வெட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்லிணைகளின் அமைப்பு. பல்வேறு அளவுப் புரிகள் வெட்டும் வகையில் பல்லிணைகள் அமைக்கப்படுகின்றன
Change over cues : நிலை மாற்று கோல் : திரைப்படச் சுருள் தொடர்ந்து ஓடுமாறு செய்வதற்காக ஒரு திரைப்பட ஒளியுருப் படிவுக் கருவியிலிருந்து மற்றொரு கருவிக்குக் கையினால் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும் திரைப் படச் சுருளிலுள்ள் தடக் குறிகள்
Channel : (I) கால்வரி : மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள கால் வரிக்கோடு. வார்ப்படங்களிலும், அறைகலன்களிலும் அலங்கார வேலைப்பாடாகப் பயன்படுத்தப்படுகிறது
(2) அலைவரிசை : வானொலி-தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பத்தகும் அலை இடைவெளிப் பகுதி
Channel iron : கால்வரி இரும்பு : தகட்டுப் பாளங்கள், இதில் ஒரு கால்வரி இரும்பு சுழல்விசிறி அலகும், இரு தட்டையான விளிம்புகளும் அடங்கியிருக்கும். இது ஒரு பக்கம் விட்டுவிடப்பட்ட உட்புழையான சதுரமாக இருக்கும்
Chapel : அச்சு அலுவலகம் : நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்
Chaplet : அடி தாங்கி : குழாயின் உலோக இடிதாங்கி
Chapter head : அத்தியாயத் தலைப்பு : ஒர் அத்தியாயத்தின் தொடக்கத்திலுள்ள தலைப்பு
Chaptrel : (க.க.) தூண் தலைப்பு : கட்டிடக் கலையில் வளைவினைத்