பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தின் தலையும், வெள்ளாட்டின் உடலும், பாம்பின் வாலும் உடைய கதம்ப உருவங் கொண்ட வேதாள விலங்கு

chimney : (க.க; பொறி.) புகை போக்கி : அடுப்பிலிருந்து எழும் புகையினை வெளியேற்றுவதறகு மோட்டின் மேலுள்ள மேற்கூடு

chimney breast : (க.க.) புகைபோக்கிச் சாய்குவடு : ஒரு புகை போக்கி அறையினுள் நுழையும் இடத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் சுவரின் பரப்பு. இந்தச் சாய்குவடு பெரும்பாலும் புகைபோக்கியை விட அகலமுடையதாக இருக்கும். இந்த அகலம் அடுப்பங்கறைத் தண்டயப் பலகையை வைப்பதற்கு இடமளிப்பதாக அல்லது அறை பின் தோற்றத்திற்கு அழகூட்டுவதாக அமைந்திருக்கும்

chimney lining : (க.க.) புகைபோக்கிக் குழல் : புகைபோக்கியினுள் புகை வெளிச் செல்வதற்காக உள்ள குழல்

china : பீங்கான் கலம் : பீங்கான் கலங்களைக் குறிக்கும் சொல்

china clay : பீங்கான் களிமண் : மங்கு செய்வதற்கு உதவும் ஒரு வகைக் களிமண். இது மிக நயமான தூள் வடிவில் தூயவெண்ணிறத்தில் இருக்கும். காகிதத்தில் நிரப்புவதற்கும், பூச்சுக் கலவைகள் செய்வதற்கும் இது பயன்படுகிறது

chinoi serie : சீன வேலைப்பாடு : சீன பாணியிலான அலங்கார வேலைப்பாடுகள்

chip : (பட்.) சிம்பு செதுக்கு : சுத்தியல், உளி கொண்டு சிம்புகள் செதுக்குதல்

கடைசல் எந்திரம் போன்ற வற்றிலிருந்து அகற்றப்படும் சிம்புகளையும் இது குறிக்கும்

chip board : ஒட்டு மரக்கட்டை : மரத்துரள், சிம்பு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை. மடிப்புப் பெட்டிகள் போன்ற கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

chip breaker : (எந்.) சிம்பு உடைப்பான் : ஒரு வெட்டுங் கருவியில் சிம்புகள் சுருண்டு உடைவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு வரிப்பள்ளம்

chip carving : செதுக்கு வேலைப்பாடு : இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்கு வேலைப்பாடு

chippendale : சித்திர வேலை அறைகலன் : 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பன்னர் சிப் பென்டேல் (1718-1779) என்பவர் வகுத்தமைத்த உயர்தர சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டு அறைகலன் வகை

chipping : (பட்.) கொத்துவேலை : சுத்தியல், கொத்துளி கொண்டு உலோகத்தை வெட்டி எடுக்கும் வேலை

chip space : சிம்பு இடைவெளி : பிடிப்புச் சாதனங்கள், வெட்டுக் கருவிகள் போன்றவற்றில், கருவியின் இயக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு அமைக்கப்பட்டுள்ள இடைவெளி

chisel : (பட்.) உளி/சிற்றுளி/கொத்துளி : கொத்தி இழைப்பதற்கும், செதுக்கி உருவாக்குவதற்கும் பயன்படும் பல்வேறு வெட்டு வளிம்புகள் உள்ள உளிகளின் வகை

கொத்துளி

chisel cape : (பட்) நுண் சிற்றுளி : குறுகிய அலகுள்ள ஒரு சிற்றுளி. இது திறவுகோல் துளைகள்