பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆயத்தம் செய்யுங்கால் உலோகப் பொருள்களைத் தூய்மைப்படுத்துவதற்காகப் பயன்படும் அமில ஊறல்

acid blast etching : (அச்சு.) அமில ஊதுலைச் செதுக்கு வேலை : ஒளிச்செதுக்குத் தகடுகளில் எந்திர முறையில் செதுக்கு வேலை செய்வதற்கான ஒரு செய்முறை

acid colour : (சாய.) அமில வண்ணம்; அமிலச் சாயம் : செயற்கையான கரிமச்சாயப்பொருள். சாயந்தோய்க்கப்படும் இழைக்கும் இந்தச் சாயப் பொருளுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதாக அமிலம் பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது. 75% கம்ப்ள இழைகளுக்கு இதைப் பயன்படுத்தியே சாயந்தேர்ய்க்கப்படுகிறது

acid cure : (தானி.) அமிலப்பதனம் : வெப்பமின்றித் துரிதமாகக் கந்தக வலிவூட்ட்ம் செய்வதன் வாயிலாக டயர்களைப் பழுது பார்ப்பதற்காகக் கந்தகக் குளோரைடைப் பயன்படுத்துதல்

acidproof paint : (மின்.) அமில எதிர்ப்பு வண்ணச் சாயம் : அமிலம் வினைபுரிவதை எதிர்க்கிற ஒரு வகை வண்ணச் சாயம்

acidulated water: (மின்.) அமிலமாக்கிய நீர் : நீர் கலந்து திட்பம் குறைக்கப்பட்ட அமிலக் கரைசல்

acieral : (உலோ.)இரும்பு முலாம் : எடை குறைந்த ஓர் உலோகக் கலவை. 6.4% செம்பு. 0.4% துத்த நாகம், 0.9% நிக்கல், 0.1% இரும்பு 0.4% சிலிக்கன் மீதம் அலுமின்யம் அடங்கியது. இது முன்னர் உந்து வண்டிகளின் உறுப்பு செய்வதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

aclinic line : (மின்.) சரிவற்ற கோடு : பூமியைச் சுற்றியுள்ள இரு கற்பனைக் கோடு. இது ஏறத்தா ஆழ்த்திய ரேகையில் உள்ளது. இதில் எல்லாப் புள்ளிகளும் ஒரு பூஜ்யக் காந்தச் சரிவினை உடையனவாக இருக்கும்

acme thread : (எந்.) முடித்திருகிழை : ஒருவதைத் திருகு இழை. இதன் திருகு இழிையின் பகுதி, சதுர இழைக்கும், V-இழைக்கும்


முடித்திருகிழை

இடைப்பட்டதாக இருக்கும். ஊட்டுத் திருகுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இடைக்கோனம் 25o தேசியத் திருகிழை அல்லது அமெரிக்கத் திரு கிழை எனப்படும் திருகிழையில் இடைக்கோணம் 60° ஆகும்

aconit: (மருந்.)அக்கோனிட் : 'மங்க் ஷுட்' எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு நச்சு மருந்து. இது மிகவும் நஞ்சுத்தன்மைவாய்ந்த வெடியக் கலப்புடைய வேதியின் மூலப்பொருள். இதனைத் தோலில் வலியைக் குறைக்கப் பயன்படுத்துகிறார்கள்

acorn tube : (மின்.) கருவாலிக் கொட்டை வடிவக் குழாய் : கருவாலிக் கொட்டை வடிவிலுள்ள ஒரு சிறிய எலெக்ட்ரான் குழாய். இதில் அடித்தளம் இல்லை. தனிமங்களுடனான இணைப்புகள் இழாயிலிருந்து ஆரைகளைப் போல் நீண்டிருக்கும் ஊசிகள் வழியாகச் செய்யப்படுகின்றன. இது உயர் அதிர்வலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது

acoustics : (இயற்.) ஒலியமைப்பியல்; ஒலி ஆய்வியல் : ஒலி தொடர்பான அறிவியல். செவிப்புலனின் ஒலியின் தாக்குறவுகளை ஆராயும் அறிவியல். ஓர் அறையில் இருப்ப