பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

களை ஏற்றிக் கடைசல் வேலைப்பாடுகள் செய்தல்

chucking reamer : (பட்.) சுழல் துளைப்பான் : செங்குத்தான வரிப் பள்ளங்களுடைய திருகுச்சுருளாகச் செல்கிற சுழல் துளைப்பான்கள். இதில் மூன்று மற்றும் நான்கு வரிப்பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாகத் துளைப்பான் ஊர்ந்து செல்லும். இது எஃகில் செயற்படுவதற்கு ஏற்ற தழுவையாக அமையும். சொர சொரப்பான துளைகளைச் செப்பம் செய்வதற்கு மற்றொரு கூர் முனைக்கோல் பயன்படுகிறது

chuffing : (விண்.) திரிபு எரிதல் : சிலவகை ராக்கெட்டுகள் இடை யிடையே நின்று, சிக்கென்ற ஒழுங்கற்ற ஊதல் ஒலியுடன் எரிகின்ற பண்பு

churning : (வார்.) கடைதல் : ஒரு வார்ப்படத்திலுள்ள திரவ உலோகத்தை சூடாக்கிய ஒரு சிறு இரும்புக்கோல் கொண்டு மேலும் கீழுமாகக் கடைந்து வார்ப்புப்படிவம் திண்மையாக அமையும்படி செய்தல்

churn moulding : கடைசல் வார்ப் படம் : நார்மன் கட்டிடக் கலையில் காணப்படும் வளைவு நெளிவுடைய வார்ப்படம்

chute : சாய்வுக் குழாய் : குப்பை கழிபொருள்களைத் தொலைவுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் சாய்சரிவுடைய குழாய்

cincture : சுற்று வளையம் : சுழல் தண்டினை அதன் ஆதாரத்திலிருந்தும் அடித்தளத்திலிருந்தும் பகுப்பதற்காகப் பயன்படும் பத்தியின் உச்சியிலும் அடியிலும் உள்ள ஒரு வளையம்

cinder bed : (வார்.) கனல் படுகை : ஒரு வார்ப்படத்தின் அடியிலுள்ள ஒரு கனல் படுகை. இது வாயு வெளியேறுவதற்கு உதவும்

cinder notch : (உலோ.) கனல்துளை : ஊதுலையின் பக்க வாட்டில், உருகிய உலோகத்தை அப்புறப்படுத்துவதற்காக உள்ள ஒரு துளை

cine camera : திரை ஒளிப்படக் கருவி : திரைப்படத்திற்குரிய ஒளிப்படக் கருவி

Cinna-bar : (உலோ.) இரசக் கங்தகை : இது ஒரு சிவப்பு நிறமான பாதரசக் கணிப்பொருள் வகை. இது சாயவேலைகளில் வண்ணப் பொருளாகவும் (நிறமி)அணுகலன்கள் தயாரிப்பதிலும் பயன்படுகிறது

cinque foil : (க.க.) இயிதழ் அணி : ஐந்து இதழ்களையுடைய மலர் முகப்பு உருவம்

cir-cassian walnut : சர்கேசிய வாதுமை மரம் : இது இளமஞ்சள் நிறமான வாதுமை மரம். இதில் கருநிறக் கோடுகளும் இருக்கும். இதன் வெட்டு மரம் 1900 முதல் முதல் உலகப் போரின் தொடக்கம் (1914) வரையில் அறைகலன்கள் தயாரிப்பதற்குப் பெருமளவு பயன் படுத்தப்பட்டது

circle : (கணி.) வட்டம் : ஒரு மையப் புள்ளியிலிருந்து சுற்று வரையிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் சம தூரத்தில் இருக்குமாறு அமைந்த ஒரு வட்டமான சுற்று வரை. ஒரு வட்டத்தின் பரிதி 360 பாகங்களாகப் பகுக்கப்படுகிறது. இதன் ஒரு பாகம், பாகை எனப்படும்

circle marker : (வானு) வட்ட மையக் குறியீடுகள் : (விமான) நிலையத்தில் தரையிறங்கும் பரப்பிடத்தின் மையத்தை அல்லது பிரதானத் தரையிறங்கு தளங்களின்