பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162


சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள்

circumference : பரிதி-சுற்றளவு : ஒரு வட்டத்தின் சுற்றளவு

circumlunar: (விண்.) நிலவு வலம் : ஒரு விண்வெளிக்கலம் நிலவை வலம்வந்து பூமிக்குத் திரும்பும் பயணம்

circumscribe : சுற்றி வட்டமிடுதல் : வெட்டாத் தொடு வரையாகச் சுற்றுவட்டமிடுதல். சுற்று வட்ட எல்லைக்குட்படுத்துதல்

ciseleur : (உலோ.) செதுக்கு ஒப்பனையாளர் : உலோக வேலையில் செதுக்கி ஒப்பனை செய்பவர்

cisiunar : (விண்.) நிலவிடை வெளி : பூமிக்கும் நில்வின் சுற்று வழிக்குமிடையிலான இடைவெளிப்பரப்பு

citizens band : (மின்.) குடி அலை வரிசை : தனிப்பட்ட குடி மக்கள் இயக்கும் இருவழி வானொலிச் செய்தித் தொடர்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண் அலைவரிசை. இதனை இயக்குபவர்கள் தொழில்நுட்ப ஆய்வுகளைத் தெரிவித்தல் ஆகாது

citric acid : (வேதி.) சைட்ரிக் அமிலம் : நாரத்தை வகையைச் சேர்ந்த எலுமிச்சம்பழம், நாரத்தங்காய் போன்றவற்றிலிருந்து வடித்திறக்கிய ஒரு வகை அமிலம். இது காடிப் பொருள்கள் வகையில் பதனிடு செய்யதக்க மூன்று நீரக அணுக்களையுடையது. இது புளிப்புச் சுவையுடையது. இது மருந்துகளிலும் நறுமணப் பொருள்களிலும், ரொட்டித் தொழிலிலும் பயன்படுகிறது

civil enginear : பொதுப்பணி பொறியாளர் : கட்டிடங்கள்,நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள், எஃகுக் கட்டுமானங்கள் போன்ற பொதுப்பணிகளை வடிவமைத்து கட்டுமானம் செய்யும் பொறியாளர்

clamp : (எந்.) பற்றுக் கருவி : வேலைப்பாடு செய்வதற்குரிய பொருள்களின் பகுதியைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு கருவி. இது இரும்பிலும் மரத்திலும் அமைந்திருக்கும்

clamp coupling : (எந்.) பற்று இணைப்பிகள் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளை கொண்ட ஒரு சுழல் தண்டு இணைப்பி. இது குறுக்காயமமைந்த மரையாணிகள் மூலமாக இறுகப் பற்றும்படி செய்யப்படுகிறது

clamp dog : (எந்.) பற்று வளை இருப்பாணி : கடைசல் வேலை செய்ய வேண்டிய பொருள்களைப் பற்றி இணைத்துப் பிடித்துக் கொள்ளும் பகர வடிவ வளை இருப்பாணி. இதில் இரு குறட்டு அலகுகளும் இருமரையாணிகளும் பற்றிக் கொள்வதற்காக அமைந்திருக்கும்

clamping bars : (வார்.) பற்றுச் சலாகைகள் : வார்ப்படத்தில் வாயுக்களின் விரிவாக்கத்தினால் விரிசல் ஏற்படாதவாறு தடுத்து வார்ப்படத்தின் பகுதிகளை ஒருங்கிணைத்துப் பற்றிக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சலாகைகள். இந்தச் சலாகைகளைத் தக்கவாறு அமைத்து கொள்ளலாம் அல்லது திண்மையாக வைத்துக் கொள்ளலாம்

clamping screw : பற்றுத் திருகு : வேலைப்பாடு செய்ய வேண்டிய