பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163


பொருள்களை நெருக்கிப் பிடித்துக் கொள்கிற அல்லது ஒருங்கிணைத்துப்_பற்றிக் கொள்கிற ஒரு வகைத் திருதி, இறுகப் பற்றிக் கொள்கிற ஒரு திருகினையும் இது குறிக்கும்

clap board : (க.க.) சாரல் தடுக்கு : மழைச் சாரல் அடிக்காதபடி கதவின் மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை

clapper box : (எந்.) இழைப்புப் பெட்டி : ஒரு வார்ப்புப் பொறியில் உள்ள கருவியைப் பற்றிக்கொள்ளும் சாதனத்தின் ஊசலாடும் உறுப்பு. இது வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளின் மீது திரும்பும் இழைப்பின் போது சரளமாகச் சாதனங்கள் செல்வதற்கு இடமளிக்கிறது

clap post : மூடு நிலைக்கால் : ஒரு நிலையடுக்கின் கதவு மோதி மூடிக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான நிலைக்கால்

classical : (க.க.) செவ்வியல் : பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டிடக் கலையினைக் குறிக்கும் சொல்

classic moulding : (க.க) செவ்வியல் வார்ப்படம் : பண்டைய கிரேக்க, ரோமானியச் செவ்வியல் பாணிக் கட்டிடக் கலையில் பயன்படுத்தப்பட்டது போன்ற வார்ப்படம்

classification : வகைப்படுத்துதல் : எளிதாக அடையாளங்கண்டு கொள்வதற்காக வகையியல்புகள் அல்லது பண்பியல்புகள் வாரியாக வகைப்படுத்துதல்

clavi chord : இசைக்கருவி : இக்காலப் பியானோவுக்கு முன்னோடியாக விளங்கிய ஆதி இசைக்கருவி

claw coupling (எந்.) வளைநக இணைப்பி : சுழல் தண்டுகளை உடனடியாக இணைக்க வேண்டியிருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தளர்வான இணைப்பி. இதில் வளைந்த நகம் போன்ற உகிருகள் அமைந்திருக்கும.

claw hammer : (மர.) வார்சுத்தியல் : ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல். தச்சு வேலை செய்பவர் இதனை முக்கியமாகப் பயன்படுத்துகின்றனர்.

clay (க.க.) களிமண் : இது சாதாரண மண் வகையைச் சேர்ந்தது. இது காய்ந்தால் இறுகலாக இருக்கும்; ஆனால் எனிதில் உடைந்துவிடும். ஈரமாக இருக்கும்போது குழைமத் தன்மையுடையது. செங்கல் தயாரிக்க இது உதவுகிறது

clay wash : (வார்.) களிமண் வண்டல் : நீரில் கரைந்த களிமண் வண்டல். வாயடைப்பான்கள்; குடுவைகள் போன்றவற்றில் மேற்படலப் பூச்சுக்குப் பயன்படுத்தப்படுகிறது

clean: (அச்சு.) துப்புரவான பணி : நன்கு அச்சிடப்பட்ட காகிதம்; அச்சுப் பணி; கறைபடியாமல் தூய்மையாக முத்திரையிடப்பட்ட மேலுறை

clean cut: மாசு மருவற்ற வேலைப்பாடு : எந்திரத்தில் மாசு மருவற்றிருக்கும் மேற்புரப்பு மாசு மருவின்றிச் செய்யப்படும் வேலைப்பாடு

clean proof : (அச்சு.) மாசற்ற பார்வைப்படி : திருத்தங்கள் அதி