பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164


கம் இல்லாத தெளிவான பார்வைப்படி

இது திருத்தங்கள் மிகுந்த தெளிவற்ற பார்வைப்படிகளுக்கு நேர்மாறானது

clean thread : (எந்.) மாசற்ற இழை : திருகில் கூர்மையாகவும், வழுவழுப்பாகவும், மாசு மருவின்றியும் இருக்கும் இழை

clearance : (எந்.) இடைவெளி : (1) கடைசல் எந்திரத்தில் வெட்டு முனைக்கும், கடைசல் செய்ய வேண்டிய பொருளின் செங்குத்து நிலைக்கும் இடையிலான கோணம் 3° அளவுக்குக் குறையாமலும் 10° அளவுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்

(2) அண்மைப் பக்கங்களுக்கு இடையிலான திறந்த இடைவெளி அளவு

cleat : ஆப்பு : ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் பிணைக்கும் நோக்கத்திற்காக அதனுடன் பிணைக்கப்படும் அல்லது சுவரில் ஆணியால் அறைந்து இறுக்கப்படும் மரத்தினாலான அல்லது உலோகத்திலான ஒரு துண்டு

cleavage: பிளவு: பிளத்தல், பிரித்தல் அல்லது பிளவுறுத்தல். ஒரு பாறையில் ஒரு குறிப்பிட்ட முறையில் பிளவு ஏற்படும் போக்கு

cleft : (எந்.) வெடிப்பு : இதுவும் ஒருவகைப் பிளவுதான். இது ரம்பத்தால் அறுத்த அல்லது வெட்டிய பிளவைவிட வலுவானது. இது மரக் கைப்பிடிகள் திருகுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது

clevis : (எந்.) வளைகம்பி கயிறு கம்பி இணைப்பதற்காக விட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இருப்புவளை கம்பி

climp cut : (எந்.) ஏற்ற முறை வெட்டுதல் : வெட்டு எந்திரத்தில் உலோகத்தை வெட்டுவதற்கான ஒரு முறை. இதில் வெட்டுங் கருவியின் சுழற்சித் திசையில் மேசை நகர்ந்து செல்கிறது

clinch : (பட்.) மடக்கி இறுக்குதல்; ஆணியை அடித்து மடக்கி இருக்குதல்

clinker rim : (தானி.) கட்டிருக்கு வட்ட விளிம்பு : இது ஒரு சக்கரத்தின் வட்ட விளிம்பு. இதன் இரு பக்கங்களிலும் விளிம்பு அல்லது வரிப்பள்ளம் அமைந்திருக்கும். அதில் டயரின் தட்டையான விளிம்பு பொருந்திக் கொள்ளும். காற்றடைக்கும்போது டயர் இந்த விளிம்பில் இறுக்கமாக அழுந்திக் கொள்ளும்

clinker : சாம்பறகட்டி : கொல்லுலைச் சாம்பற்கட்டி

clip angles : (பொறி.) பிடிப்புக் கோணங்கள் : இரு உறுப்புகளை இணைப்பதற்குப் பயன்படும் சிறு தூண்களின் கோணங்கள்

clipper : அதிர்வுப் பிரிவு : வீடியோபடத் தகவலிலிருந்து ஒரே கால நிகழ்வு அதிர்வுகளைப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு முறை

clipping : கத்தரித்தல் : சில வகைத் துணிகளில் மேற்பரப்பு சமநீளத்திற்கு வெட்டச் செம்மைப்படுத்துதல்

clock wise : வலஞ்சுழித்த : கடிகார முள்செல்லும் திசையில் வலஞ்சுழித்து இடமிருந்து வலம்செல்லுதல.