பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

clog : தடுப்பு : முட்டுக் கட்டையிடுதல்; பளுவினால் இயக்கம் தடித்தல்; அந்நியப் பொருளால் இயக்கம் தடைபடுதல்

close (க.க.) சுற்றெல்லை: தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை

closed circuit : (மின்.) முடிப்புச் சுற்றுவழி : (1) மின் விசை ஆதாரத்திலிருந்து ஒரு புறச் சுற்றுவழியாகச் சென்று மீண்டும் ஆதாரத்திற்குத் திரும்பி வருகிற முழுமையான சுற்றுவழி. இது ஒரு கட்டுப்பாட்டு விசையினை அமைத்து நிகழ்த்தப்படுகிறது

(2) வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு மட்டும் உரிய தொலைக்காட்சி முறை

closed lock joint : (உலோ. வே.) மூடிப்பூட்டிய இணைப்பு : இருமுனைகளைக் கொக்கியால் பிணைத்து ஏற்படுத்தப்படும் ஒரு வகைப்பிணைப்பு. இந்தப் பிணைப்பில் ஒட்டவைப்பு செய்யப்படுவதில்லை

close fit : அணுக்கத் திருகிழை : மிக நெருக்கமாவுள்ள இந்தத் திருகிழை மிகத்துல்லியம் தேவைப்படும் விமான உறுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது

close nipple : (கம்.) குறுகிய இழை : சாதாரணக் குழாய் இழையினைவிட இரண்டு முள்ள இழை. இதில், இரு தொகுதி இழைகளுக்கிடையே தோள்மூட்டு எதுவும் இருக்காது

closure : (க.க) அடைப்பு : ஒரு வழியின் முடிவிடத்தை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செங்கலின் பகுதி

cloth of estate : அலங்காரத் திரைச் சீலை : அரியணை மீது அல்லது சிம்மாசனத்தின் மீது அலங்காரமாகத் தொங்கவிடப்படும் திரைச் சீலை

cluster : (மின்.) சரவிளக்கு : இரண்டுக்கு மேற்பட்ட விளக்குகளையுடைய விளக்குச் சரம். இந்த விளக்குகள் நெருக்கமான இடைவெளிகளில் அமைந்திருக்கும்

clustered (க.க.) கொத்துச்சரம் : திரண்ட கொத்தாகச் சேர்க்கப்பட்டுள்ள சரம்

clutch : (தானி; எந்.) ஊடிணைப்பி : உந்து வண்டிகளில் இயங்குறுப்புகளை ஒடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு. இதிலுள்ள மிதி கட்டையை அழுத்த உந்துவண்டி சக்கரம் நிற்கும் மிதி கட்டையை விடுவிக்கும்போது சக்கரம் ஒடும்

சுழல் தண்டுகளுக்கிடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்தும் சாதனம்

clutch pedal : (தானி; எந்.) ஊடிணைப்பி மிதிகட்டை : ஊடிணைப்பியை இணைக்கவும், துண்டிக்கவும் கூடிய இடதுகால் மிதிகட்டை

clutch pressure plate : (தானி; எந்.) ஊடிணைப்பி அழுத்தக் தகடு : ஊடிணைப்பியின் ஒருங்கின்ணப்பில், நெம்புகோல்களின் மீது ஏற்றப்பட்ட ஒர் உலோக வளையத்தின் பகுதி. திருகு சுழலான விற்சுருள்கள் இந்த ஊடிணைப்பித் தகட்டின் மீது அழுத்தம் உண்டாக்கி தேவையான உராய்வினை ஏற்படுத்தி விசையினை எஞ்சினிலிருந்து விசை ஊடிணைப்புக்கு அனுப்புகிறது

coal : நிலக்கரி : பூழியிலிருந்து தோண்டியெடுக்கப்படும் பழுப்பு நிறமான அல்லது கருநிறமான கணிமப் பொருள். இது எளிதில் தீப்பற்றத் கூடியூது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தாவரப்படிவு