பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

வர்களுக்கு ஒலி தெளிவாகக் கேட்பதைப் பொறுத்து அந்த அறையின் ஒலி அமைப்பு நன்றாகவோ, மோசமாகவோ இருப்பதாகக் கூறப்படுகிறது


acquired character: (உயி.) ஈட்டுப் பண்பு : விலங்கின் அல்லது தாவரத்தின் ஆயுட்காலத்தின் போது, அதன் உடலில் நோய் அல்லது உணவின் காரணமாகப் பரம்பரையாக ஏற்படும் மாறுதல்


acre : ஏக்கர் : ஒரு நில அளவுக் கூறு. 160 சதுர முழம் அல்லது 4840 சதுரகெஜம் அல்லது 43,560 சதுர அடி அல்லது 4425.696 சதுரமீட்டர் கொண்ட நில அளவு


acriflavine : (மருந்.) அக்ரிஃபிளேவின் : கரிஎண்ணெயில்(கீல்)இருந்து தயாரிக்கப்படும் மஞ்சள் நிறமான் நச்சுக் கொல்லி மருந்து. இது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. குருதி நிணநீர் மூலம் இதன் செயல் வலிவடைகிறது


acrobatics : (வானு.) விமானக்கரண வித்தை : விமானம் வானத் தில் குட்டிக்கரணங்கள் போட்டு கரண வித்தைகள் செய்து காட்டுதல்


acromegaly: (நோயி.) கபச் சுரப்பி நோய் : கபச்சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் ஒரு நோய். இதனால தலை, கைகள், பாதங்கள் அளவுக்குமீறி பருத்து விடுகின்றன


acromion process : (நோயி.) தோள் திருகு நோய் : தோள்பட்டை எலும்பின் ஒரு பகுதி சற்றே பின்புறமாகத் திருகி இருத்தல்


acroteria : (க.க.) உச்சிநிலை மேடை : அடித்தளமோ அடிப் பீடமோ இல்லாத வரிமுக்கோண முகப்பு முகட்டின் உச்சியிலும் இறுதி முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள சிறிய நிலைமேடை


acrylic resins: (வேதி. குழை.) கண்ணாடிப் பிசின் : மெதில்-மெத்தாக்கிரிலேட் பிசின் என்றும் இதற்குப் பெயர். பிளெக்சிகிள்ஸ், லூசைட் போன்ற கண்ணாடிப் பிசின்வகையைச் சேர்ந்தது. இந்தப் பிசின்களில் கண்ணாடியை விட அதிக அளவில் ஊடுருவக் கூடியது. விண் பயனவாகன கவிகை மூடிகளிலும், ஒளிச் சிதறிகளிலும்தனி வகைப் பலகணிகளிலும், காட்சிப் பெட்டகங்களிலும் இப் பிசின்கள் பயன்படுகின்றன். செயற்கருவிகளிலும், வழியொட்டுக்கண்ணாடிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிசின் மூலைக் கோணங்களிலும் ஒளியைப்பாய்ச்சுகிறது (பார்க்க: குழைமவியல்)


actinic rays : வேதியியல் விளைவு ஒளிக்கதிர்கள் : ஒளிப்படப் பால் மங்களின்மீது வினைபுரியக்கூடிய ஒளிக்கதிர்கள்


actinic: (விண்.) ஒளிக்கதிர் விளைவுடைய : வேதியியல் விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டியது. வேதியியல் ஒளிக்கதிர் விளைவுகளை உண்டாக்கக்கூடிய மின்காந்தக் கதிரியக்கத்துடன் தொடர்புடையது


actinium : ஆக்டினியம் : கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில் ஒன்று. இது அணு எண் 89 கொண்ட ஒரு தனிமம்.


actinomyces : (தாவ.) நட்சத்திரக் காளான் : நட்சத்திர வடிவிலுள்ள ஒரு வகைக் காளான். இது தரையடி அறைகளிலும், மழைக்குப் பிறகு பூமியிலும் ஈரநெடின்ய உண்டாக்குகிறது


actinomycosis : (நோயி.) மரநாக்கு நோய் : நட்சத்திரக்காளான்கள் அல்லது அவை போன்ற உயிரிகள் கார