பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
169


கும் பரிணாம மாற்றம் அல்லது உருத்திரிபு

cold forming : (உலோ.) உலோக உருவாக்கம் : உலோகத்தை வெட்டாமல் அதனைத் தேவையான வடிவத்தில் உருவர்க்குதல். உலோகத்தை நிலைகுலைத்தல், புறம் உந்தித் தள்ளுதல், பதிவச்சு செய்தல், சம்மட்டியால் ஆடித்தல், உருட்டுதல், வளைத்தல், இழுத்தல், சுழ்ற்றுதல் ஆகியவற்றின் மூலம் உருவாக்கம் செய்யலாம்

cold moulding : (குழை.) தன்வார்ப்படம் : சாதாரண வெப்ப நிலைகளில் வடிவங்களை உருவாக்கி, பின்னர் சூடாக்குவதன் மூலம் கடினமாக்குகிற ஒரு செய்முறை.

cold moulding compounds : (குழை.) தண்வார்ப்படக் கூட்டுப் பொருள் : சாதாரண அறை வெப்பநிலையில் வடிவங்களை உருவாக்கி, பின்னர் சூளைகளில் சூடாக்கி கடினமாக்கப்படும் வார்ப்படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் கூட்டுப் பொருள்

cold rolled steel : (உலோ.) தண் உருட்டு எஃகு : இதனை ஆழமற்ற மூட்டு அனல் உலையில் எஃகு செய்யும் முறையிலோ (திறந்த உலை), காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகத் காற்றோட்டக் கீற்றுக்களைப்பாயவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் பெஸ்ஸமர் முறையிலோ தயாரிக்கலாம். இதில் கார்பன் 0.2% முதல் 0.20% வரைக் கலந்திருக்கும். வெண்மையான பளபளப்பான பரப்புடையதாக இந்த எஃகு விற்பனை செய்யப்படுகிறது. எந்திர உதவியில்லாமலே இதனை வேண்டிய வடிவங்களில் அமைக்கலாம். இது கடினமானதாயினும் உறுதியானதன்று

cold rolling : தண் உருட்டல் : எஃகினைத் தண் உருட்டல் செய்வதன் மூலம் அதற்கு மிக அதிகமான விறைப்புத் திறனை அளிக்கலாம். ஆனால் அப்போது அதன் உரப்பும், ஒசிவுத் திறனும் போய் விடும். தண் உருட்டல் எஃகு, வெப்ப உருட்டல் எஃகை விட அதிக வளவளப்புடையதாக இருக்கும்

cold saws : தண் ரம்பங்கள் : உலோகங்களை சுழல் ரம்பங்களால் அறுப்பதற்கான விசைப்பொறி

cold storage : (குளி.) குளிர் சேமிப்பு : காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன் போன்ற அழுகும் பொருள்கள் பெருமளவுக் குளிர்பதன முறை மூலம் பாதுகாப்பாகச் சேமித்துவைத்தல்

collapsing tap : (எந்.) மடங்கு இழைப்புக் கருவி : எந்திர முறையில் புரியாணி உள்வரி இழைப்புதற்குப் பயன்படும் இது வகைக் கருவி. தானே திறந்திடும் வார்ப்புப் படிவங்களில் உள்ளது போன்ற அதே தத்துவமே இதிலும் பயன்படுகிற்து. ஆனால் இதில் வினைகள் எதிர்மாறாக நடைபெறும். இழைக்குச் சேதமின்றி அதிக விரைவாக உள்விரி இழைப்பதற்கு இக்கருவி பயன்படுகிறது

collar beam : (க.க) சாய்வு உத்தரம் : சாய்வான இரண்டு உத்தரக் கைகளை இணைக்கும் விட்டம்

collar oiling : (எந்.) வளைய எண்ணெய்ப் பூச்சு : அதிவேக எந்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகளிலுள்ள எண்ணெய்க் கலத்தில் செல்லும் ஒரு வளையம் இருசுக் கட்டையின் மீது கவிழ்க்கப்படுகிறது அல்லது அதனுடன் இணைக்கப்படுகிறது. வளையத்திலிருந்து எண்ணெயை