170
வழித்து, இருசுக் கட்டையின் மீது பரவலாகப் பூசுவதற்காகத் தாங்கியின் மேற்பகுதியில் துடைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன
collar screw : (பட்.) வளையத் திருகு : இதுவழக்கமான கொண்டைத் திருகுபோலவே பயன்படுத்தப்படுகிறது
collar stud : (எந்.) வளையக் குமிழ் : இந்த வளையூத் குமிழ் ஒரு முனையில் குமிழையும் மறுமுனையில் ஒரு சுழல் தண்டினை அல்லது கதிரினையும் கொண்டிருக்கும். இவ்விரண்டினை குமிழின் உள்உறுப்பாகிய ஒரு வளையம் பிரிக்கிறது. இது பல்லிணைகளையும், தாங்கிகளையும் தாங்கிச் செல்ல உதவுகிநிறது
collector : ஒப்பாய்வாளர் : ஏடுகள். நூல்களின் பக்க ஒழுங்கு முதலியவற்றை ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவர்
collector ring : (மின்.) திரட்டு வளையம் : இது ஒரு வட்ட வடிவமான செப்புத்துண்டு. ஒரு நிலையான உறுப்பிலிருந்து ஒர் இயங்கும் உறுப்புக்கு மின்னோட்டத்தைக் கொண்டு செல்வதற்காக ஒரு தூரிகை இந்த வளையத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்
collet : (எந்.) வளையம் : இது பற்றிக் கொள்வதற்கான ஒரு வளையம் அல்லது ஒரு பற்றுக் கருவி. கடைகளில் இதனைக் குதை குழிவுகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்
collodion : கோலோடியோன் : ஒளிப்படத் தொழிலிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படும் வெடியகக் கரைசல். இதில் ஆல்கஹாலும், ஈதரும் கலந்த ஒரு கலவையில் செல்லுலோசின் தரங்குறைந்த நைட்ரேட் கலந்திருக்கும். ஒரு பரப்பின் மீது ஒரு படலம் ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது
colloid : (வேதி) கரை தக்கை : கரைந்த நிலையிலும், சவ்வூடு செல்லுமளவு கலவாப் பொருளாகவும் உள்ள ஒரு கூழ் நிலைப் பொருள். 5-100 மில்லி மைக்ரோன் வடிவளவுள்ள துகள்கள் சிதறச் செய்யப்படும்போது கரை தக்கை நிலையடைகின்றன. பல்வேறு செயற்கைப் பிசின்கள் இந்த வகையைச் சேர்ந்தவை
collotype : (அச்சு.) அச்சுமென் தகடு : புத்தகப் படங்கள், விளம்பரங்கள் முதலியவற்றை அச்சிடுவதற்காகக் கதிர்வேதி முறையில் உருவாக்கப்பட்ட மென்தகடு
colonial : (க.க.) குடியேற்றஞ் சார்ந்த : அமெரிக்காவில் ஆதிக்கக் குடியேற்றக் காலத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க அரசு அமைக்கப்படும் வரையிலான காலத்தின் போது கையாளப்பட்டு வந்த கட்டிடக் கலைப்பாணி. அமெரிக்கப் புரட்சிக்கு முந்தியகாலத்திய பாணி அறைகலன்களையும் இது குறிக்கும்
colonnade : (க.க.) தூண் வரிசை : சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்ட தூண் வரிசை
colophon : (அச்சு.) அணியுரை : ஏடு குறித்த தகவல்களைக் கொண்டிருக்கிற பழங்காலப் புற அணியுரை
colour : வண்ணம், நிறம் : ஒரு மாலையின் அல்லது வண்ணக் கரைசலின் நிறக் கலவைகளில் ஏதேனும் ஒன்று, சில வண்ணங்களை ஈர்த்துக் கொள்ளவும், வேறு