பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
173


வைத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது

comminute : நுண்துகளாக்குதல் : திடப்பொருள்களை அரைத்தல் அல்லது தூளாக்குதல் மூலம் நுண் துகள்களாகச் செய்தல்

common brick : பொது ஆதாரச் செங்கல் : கரடுமுரடான வேலைக்கு அல்லது பள்ளம் நிரப்புவதற்கு அல்லது சாய்வு அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செங்கல்

common base : (மின்.) பொது ஆதாரம் : ஒரு மின்மப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) மின்சுற்று வழி. இதில் உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்றுவழிகள் பொதுவான ஆதாரத்தைக் கொண்டிருக்கும்

common collector : (மின்.) பொதுத் தொகுப்பான் : உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்குத் தொகுப்பான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின் பெருக்கிச் சுற்று வழி

command : (கணிப்.) ஆணைச் சமிக்கை : (1) ஒரு நிகழ்வை அல்லது செயல் முறையைத் தொடக்கி வைக்கிற ஆணைச் சமிக்கை. (2) கணிப்பொறியில், ஒர் அறிவுறுத்தத்தின் விளைவாக நிகழ்கிற பல சமிக்கைகளின் ஒரு தொகுதி

common emitter : (மின்.) பொது உமிழ்வான் : உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்கு உமிழ்வான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின்பெருக்கிச் சுற்றுவழி

common rafter : (க.க.) பொதுக் கைமரம் : ஒரு கூரையின் எந்தப் பகுதிக்கும் பொதுவான இறைவாரக் கைமரம்

commutating flux : (மின்.) திசைமாற்றுப் பெருக்கு : தன் தூண்டல் மின்னியக்க விசையைச் சமனப்படுத்துவதற்கான மின்னியக்க விசையை உண்டாக்குவதற்குத் தேவையான மின் பெருக்கு

commutating pole : (மின்.) திசைமாற்று முனை : மின்னக மின்னோட்ட்ங்களின் குறுக்குக் காந்த மூட்டுதலை ஒரு நேர் மின்னாக்கியின் இரு முனைகளுக்குமிடையில் செருகப்படும் ஒரு மின்காந்தச் சலாகை

commutation : (மின்.) திசை மாற்றம் / நுதல் : பார்க்க : திசை மாற்றி

commutator : (மின்.) மின்னோட்டத் திசைமாற்றி : மின்னோட்ட அலைகளைத் திசை மாற்றித் திருப்பி விடும் கருவி

compact car : (தானி.) கச்சிதமான கட்டமைவான உந்து வண்டி : எளிதாக நிறுத்தி வைப்பதற்கும், குறைந்த செலவில் பேணுவதற்கும் குறைந்த அளவு எரிபொருளில் அதிகதூரம் செல்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட கச்சிதமான உடலமைப்புக் கொண்ட ஓர் உந்துவண்டி

comparator : (பட்.) ஒப்பீட்டு அளவி : இது ஜேம்ஸ் ஹார்ட்னஸ் என்பவரால் விடிவமைக்கப்பட்ட பொறியமைவு. திருகிழைகளையும் அவை போன்ற உறுப்புகளையும் அளவிடுவதற்கு இது பயன்படுகிறது. திருகிழையை விரும்பிய அளவுடன் ஒப்பிடுவதற்கு ஒரு வரைபடத்தில் விழும் விரிவான நிழலை விழவைத்து இந்த அளவீடு செய்யப்படுகிறது

compass : திசைகாட்டி : வட்டமான மேற்பரப்பில் அளவுகள் குறிக்கப்பட்டு வட்டமாகச் சுழலும் முள்ளிணைக் கொண்ட ஒரு கருவி. முள்ளின் முன்யைக் கொண்டு திசையைன்றியலுாம். மின்னியலில், மையத்தில் சம நிலையிலுள்ள ஒரு நிரந்தரமான