பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
177

தெளிக்கப்பட்டு, காற்றினை அழுத்துவதால் உண்டாகும் வெப்பத்தின் மூலம் சுடர் மூட்டப்படுகிறது

compression moulding : (குழை.) அழுத்த வார்ப்படம் : இது பிளாஸ்டிக்கில் வார்ப்படஞ் செய்வதற்கான ஒரு முறை. இது சூட்டால் நிலையாக் இறுகுந் தன்மையுடைய பிளாஸ்டிக் கூட்டுப் பொருள்களை ஆக்கப் பொருளாக வடிவாக்கம் செய்வதற்குப் பயன்படுகிறது. இந்த முறையில் முன்னரே சூடாக்கப்பட்ட வார்ப்படக் கூட்டுப் பொருள் ஒரு திறந்த வார்ப் படத்தில் ஊற்றப்பட்டு, வார்ப் படம் மூடப்படுகிறது. கீழ்நோக்கி இயங்கும் ஒர் அழுத்தக் கருவி மூலமாக வெப்பமும் அழுத்தமும் செலுத்தப்படுகிறது. இதனால் வார்ப்படக் கூட்டுப் பொருள் மென்மையடைந்து, பள்ளங்களில், அழுந்திப் பதிந்து வேதியியல் மாற்றத்திற்குள்ளாகி இறுக்கமடைகிறது

compression ratio : (தானி, எந்.) ஆழுத்த விகிதம் : உந்து வண்டியில் சுழல்தண்டு கீல்நிலை வீச்சின் இறுதியில் இருக்கும்போது உள்ள வாயுமண்டல அழுத்தத்திற்கும், அழுத்த வீச்சின் உச்சநிலையில் சுழல் தண்டு இருக்கும்போது உள்ள ஆழுத்தத்த்திற்குமிடிையிலான விகிதம். இது அழுத்த அளவுகளில் கணக்கிடப்படுகிறது

compression ring : (தானி, எந்.) அழுத்த வளையம் : இது சுழல் தண்டுக்கான ஒருவகை வளையம். இது அழுத்த இழப்பீட்டினைக் குறைப்பதற்கும் எண்ணெய் முத்திரையை நிலைப்படுத்தி வைப்பதற்கும் பயன்படுகிறது. சுழல் தண்டில் உச்சியிலும் இரண்டாவதாகவும் உள்ள வளையங்கள் இந்த வகையினதாக இருக்கும்

compression spring : (எந்.) அழுத்த விற்கருள் : இது திருகுகழலான ஒருவகை விற்சூருள்.இது அழுத்தத்தின் கீழ் செய்ற்படும்போது குறுகலாகும் தன்மையுடையது

compression stroke : (தானி, எந்.) அழுத்த வீச்சு : ஒரு நான்கு சுழற்சி எந்திரத்தில் உள்ள சுழல் தண்டின் இரண்டாவது வீச்சு. உள்ளிழுப்பு ஒரதர், வெளியேற்று ஒரதர் இரண்டும் முடியிருக்கும் போது இந்த வீச்சு உண்டாகிறது

compressor : (குளி.) அழுத்தி : ஒரு குளிர்பதனச் சாதனத்தில் அழுத்தப்பட்ட சூடான வாயு குளிர்பொருளைத் திரவ நிலைக்கு மாற்றுவதற்காக வடிகலத்திற்குள் செலுத்துவதற்கான இறைப்பான்

compressive strength : (பொறி.) அழுத்த வலிமை : குறுகலாக்குவதற்கு அல்லது நெருக்குவதற்கு அழுத்த முனையும் விசைகளுக்கான தடை

computer : (கணி.) கணிப்பொறி : சிக்கலான கணிதவியல் கணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய தகவல்களை உட்புறத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒரு பொறியமைவு. எண்மானக்கணிப் பொறிகள் எண்மான வடிவில் தகவல்களைக் கணிக்கின்றன. இவை ஒத்திசைவுக் கணிப்பொறிகளை விடத் துல்லியமாகக் கணிக்கக் கூடியவை. எழுத்தடுக்குப் பணிமுதலாக அனைத்துத் துறை பணிகளுக்கும் உதவும் உந்து சக்தியாக கணிப்பொறியின் பணி விரிந்துள்ளது

concave : உட்குழிவான / உட்குழி வாக்கு; உட்குழிவாக்கப்பட்டது; மேல் வளைவு; கிண்ணம் போன்ற வடிவுடையது: பள்ளமானது