பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ணமாக உண்டாகும் ஒருவகை நோய். இது கால்நடைகளின் நாக்கில் கெட்டியான வீக்கத்தை ஏற்படுத்துகிறது

activated alumina : (குளி.) செயலூக்கிய அலுமினிய உயிரகை : இது ஒர் அலுமினியம் ஆக்சைடு. இது ஈர்க்கும் பொருளாகப் பயன்படுகிறது

active conductor: (மின்.) செயல் முனைப்பு மின் ஊடு கடத்தி: மின்னோட்டம் பாய்ந்து செல்லக்கூடிய ஊடுகடத்தி

active current : (மின்.) செயல் முனைப்பு மின்னோட்டம் : மாறு மின்னோட்டத்தில் மின்னழுத்த நிலையிலுள்ள ஒரு பகுதி; அல்லது வாட் இல்லாத அல்லது பயனில்லாத ஆற்றலிலிருந்து விளைவுறு ஆற்றலை வேறுபடுத்திக் காட்டக்கூடியது

active immunization:தீவிரத் தொற்றுத் தடை காப்பு:இறந்த வலிமை குன்றிய பாக்டீரியாக்களை தீங்கற்றவையாக்கி, அதே சமயம் அவை குருதியில் பாதுகாப்பாகச் செயற்படும் படி செய்து, தொற்றுநோய்களுக்கு எதிரான தடைகாப்பாக ஊசிமூலம் உடலில் செலுத்துதல். எடுத்துக்காட்டு: அம்மை குத்துதல்

active material: (மின்.) செயல் முனைப்பு மூலப்பொருள்:ஒரு சேமக் கலத்தில், மின்கலத்தின் நேர்மின் தகட்டில் (வலை) உள்ள பச்சைக் குழம்பு என அழைக்கப்படுவது

active pressure : (மின்.) செயல் முனைப்பு அழுத்தம் : மாறு மின்னோட்டத்தில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும் விளைவுறு மின்னழுத்தம். ஒரு மின் சுற்றின் செறிவூட்ட மின்னழுத்தத்திலிருந்து வேறுபட்டது

actuate :துண்டு இயக்கு : இயக்குதல், இயங்கும்படி செய்தல். தானியங்கி எந்திரங்களின் ஒரதர்கள், இயக்குத் தண்டின் இயக்கத்தின் காரணமாக இயங்குவதற்குத் தூண்டப்படுகின்றது.

acute angle : (கணி.) குறுங்கோணம் : ஒரு செங்கோணத்திற்கு அதாவது, 90° கோணத்திற்குக் குறைந்த கோணம்

ad : (அச்சு.) விளம்பரம் :விளம்பரத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடு

adam : 'ஆடம்' அறைகலன்:ஆடம் சகோதரர்கள் (1728-1792) புகுத்திய ஒருவகை ஆங்கிலேய அறைகலன் அலங்கார முறை. பொதுவாகப் பண்டைய ரோமானிய அணிகலன்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுவது

adam's apple : (உட.) குரல் வளை : மனிதரின் தொண்டைப் பகுதியின் முன்புறம் இருக்கும் ஒரு சிறிய எடுப்பான திரட்சி. இதுவே குரல் உண்டாக்கும் உறுப்பு

adaptability: (இயற்) நெகிழ்வுத் திறன் :தறு வாய்க்கேற்ப இயைவு கொள்ளும் திறன்; தற்போதுள்ள சூழ்நிலைக்கு உகந்தவாறு எளிதில் பொருந்தக்கூடிய திறன் அளவு

adapter : மாற்றமைவுப் பொறி : வெவ்வேறு வடிவளவுகளிலுள்ள கருவிகளை ஒன்றுக்கொன்று மாற்றிப் பயன்படுத்திக் கொள்வதற்கு உதவும் துணைப்பொறி

adapter plate : (குழை.) மாற்றமைவுப் பொறித் தகடு: உட்செலுத்து வார்ப்படப் பணியில், உரு அழுத்துப் பொறியுடன் அல்லது