பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
178

concealed wiring : (மின்.) மறை வடக்கக் கம்பியிணைப்பு : சுவரில் அல்லது தரையில் மின்கம்பி இணைப்புக் கொடுக்கும்போது, கம்பி வெளியே தெரியாதவாறு மறைவடக்கமாக அமைத்தல்

concentrated : (வேதி.) செறிவாக்கிய : கரைசலில் கரைபொருளின் அணுத்திரள் மிகு வீதத்தில் இருக்குமாறு செறிவாக்கம் செய்யப்பட்டது

concentrated load : (க.க.) ஒரு முகப்படுத்திய பாரம் : உத்தரத்தில் இரும்புத் துாலத்தில் அல்லது கட்டுமானத்தில் பாரம் ஒரிடத்தில் ஒரு முகமாகப் படியுமாறு அமைத்தல்

cencentric : பொது மையம் கொண்டுள்ள : ஒரு பொதுவான மையத்தைக் கொண்டிருப்பது

cencentric jaw chuck : (எந்.) பொதுமையத் தாடைக் கல்வி : தாடைகள் அனைத்தும் ஒரு பொதுவான செயல்முறை மூலம் மையத்தை நோக்கி அல்லது மையத்திலிருந்தும் சம அளவில் நகரும் வகையில் அமைப்புடைய ஒரு பற்றுக் கருவி

conception : புனை திட்டம் : மனத்தில் கருத்துருவாக உருவாகியுள்ள ஒரு திட்டம் அல்லது கருத்துப் படிவம்

concrete : திண்காரை/கான்கிரீட் : சிமென்ட், மணல், சரளை ஆகியன வேண்டிய வீத அளவுகளில் கலந்து தயாரிக்கப்படும் கட்டுமானக் காரை

concrete blocks : (க.க.) திண்காரைப் பாளங்கள் : குறுகிய இடை வெளிகளில் திண்காரையை இட்டு வார்த்தெடுக்கப்பட்ட பாளங்கள் சுவர்கள் கட்டுவதற்குப் பயன்படுகின்றன

concurrent forces : (எந்.) ஒருங்கிணைவு விசைகள் : ஒரு பொதுவான புள்ளியிலிருந்து புறப்படுகிற அல்லது ஒரு பொதுவான புள்ளியில் சென்று கூடுகிற விசைகள்

condensation pump : உறைமான இறைப்பி : நீராவி மீள்வரிவிலிருந்து திரவ உறைமானத்தை அகற்றுவதற்கான ஒரு சாதனம்

condensation resins : (குழை.) உறைமான பிசின்கள் : ஆக்சிஜன் ஊட்டப்படுவதால் இரு நீரக அணுக்கள் குறைவுபட்ட வெறிய மாகிய ஆல்டிஹைடு வகையில் ஒன்று. ஃபினோலால்டிஹைடு பிசின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. இறுதியான ஆக்கப் பொருள் உறைமான மீச்சேர்மங்கள் எனப்படும்

condensation trail : செறிவுப் புகைத்தடம் : சில சூழ்நிலைகளில் பறக்கும் ஏவுகணை அல்லது வேறு கலம் பின்புறமாக உமிழ்ந்து செல்லும் மேகம் போன்ற வெண் புகைத்தடம். இது நீர்த்துளிகளால் அல்லது சிலசமயம் பனிக்கட்டிப் படிவங்களால் உண்டாகிறது

condensed : (அச்சு.) குறுக்கப்பட்ட : அச்சுக் கலையில் அச்செழுத்துக்களைக் குறுகிய முகப் புடையனவாகச் செய்திருப்பது. குறுகிய முகப்புடைய அச்செழுத்து என்பது அதன் உயரத்துக்குக் குறைந்த விகிதத்தில் கனம் உடைய அச்செழுத்தாகும்.

condenser : (மின்.) மின்விசையேற்றி வடிகலம் :

(1) மின் ஆற்றலின் வீறு பெருக்குவதற்கான அமைவு

(2) நீராவிப் பொறியில் ஆவியை நீர்ப்பொருளாக மாற்றுவதற்கான அமைவு

condenser : (குளி. பர.) வடிவாலை : குளிர்பதனச் சாதனத்தில் ஆவியாகிய குளிருட்டும்பொருளை