பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
182

constant-mesh transmission : (தானி.) இடையறா வலைப் பின்னல் இயக்கம் : முதன்மைச் சுழல் தண்டிலும் எதிர்சுழல் தண்டிலும் பல்லிணைகள் எப்போதும் வலைப் பின்னல் அமைப்பில் அமைந்துள்ள இயக்கம்

constant potential : (மின்) மாறா மின்னழுத்த நிலை : ஒரு மின் விசை மற்றும் ஒளிச்சுற்று வழியில் பாயும் நிலையான மின்னழுத்த அல்லது மின்னூட்ட அளவு

constant pressure : (தானி.எந்) நிலை அழுத்தம் : மாறாத எதிர்ப்பழுத்த வீதம் அல்லது இயலாற்றல் அளவு

constant speed motor: (தானி) நிலைவேக மின்னோடி : மின்னழுத்தம் அதிகமாகும் போது வேகம் குறையாதிருக்கிற ஒரு மின்னோடி

constant vacuum carburetor : (தானி.) நிலை வெற்றிட எரி-வளி கலப்பி : இதில் ஒரு கனமான ஓரதர் அடங்கியிருக்கும். அது உள்ளிழுப்பு அறையின் வெற்றிடத்தின் இழுவை மூலமாக இயங்குகிறது. இந்த இழுவை விசை, காற்றுக்கு எரிபொருளின் அளவின் விகிதத்தில் அமைந்திருக்கும்

constant voltage or potential : (மின்.) மாறா மின்னழுத்தம் : மின் சுமை அளவு மாறும் போது மாறாத மின்னழுத்தத்தைப் பராமரிக்கிற ஓர் ஆதாரம்

constellations : (விண்) விண் மீன் குழுமம் : நிலையான விண் மீன்களின் தொகுதியுடன் சுற்றி விண்மீன் குழுமங்களில் ஒன்று. இது போன்ற 90 குழுமங்கள் இருப்பதாக இதுவரைக் கண்டறியப்பட்டுள்ளது

constituent : (வேதி) அமைப்பான் : ஒரு பொருளில் அமைந்திருக்கும் தனிமங்களின் அல்லது கூட்டுப்பொருள்களின் ஒரு கூறு

construction : கட்டுமானம்: கட்டிடங் களைக் கட்டியெழுப்புதல். மரம், இரும்பு அல்லது எஃகு பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்களின் பாணியையும் இது குறிக்கும்

consulting engineer ; ஆலோசனைப் பொறியாளர் : பொறியியல் தொடர்பான பொருட்பாடுகளில் ஆலோசனைகள் கூறுவதற்கு ஏற்ற அனுபவமும் தொழில் நிபுணத்துவமும் வாய்ந்த ஒரு பொறியியல் வல்லுநர்

contact : (மின்.) மின் தொடர்பு: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மின்கடத்திகளை ஒரு முழுமையான மின்சுற்று வழி உண்டாகும் வகையில் தன்முறையில் அடுக்கி வைத்தல்

contact breaker : (மின்) தொடுமுனை முறிப்பான் : ஒரு மின் சுற்று வழியை விரைவாகவும் தானாகவும் முறிப்பதற்குரிய ஒரு சாதனம்

contact flight : காட்சி இயக்கம்: நிலப்பரப்பின் காட்சியறிவின் மூலம் விமானத்தை இயக்குதல்

contact forms: (மின்) தொடர்பு விசை : மின் உணர்த்தியில் உள்ள மின்தொடர்பு விசைகளின் வரிசை

contact-lens : விழியொட்டுக் கண்ணாடி : கண் பார்வைக் கோளாறு திருத்தக் கண் விழியோடு ஒட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை

contact potential : (மின்) தொடர்பு மின்னோட்ட வேறுபாடு : பல்வேறு எலெக்ட்ரான் தொடர்புடைய உலோகப் பரப்புகள் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் போது அல்லது அவற்றைப்