பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
186

லாக இடம்விட்டு இடம் கொண்டு செல்லும் கருவி

convolute: சுருண்ட: ஒன்றன் மேல் ஒன்றாக ஒன்று சேர்த்து சுருட்டிய அல்லது மடித்துச் சுருட்டிய

convulsion therapy: (மருத்) அதிர்ச்சி மருத்துவம்: மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசைமூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவ முறை, முக்கியமாகப் பித்து நிலைச் சேர்ர்வு, முரண்மூளை நோய் போன்ற மனக்கோளாறுகளைக் குணப்படுத்த இந்த முறை பயன்படுகிறது

coolant : வெப்பாற்றி: வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு, வெப்புத் தணிப்பதற்குரிய திரவம், சோடா நீர், கொழுப்பு எண்ணெய், மண்ணெண்ணெய், கர்ப்பூரத் தைலம் ஆகியவை அல்லது இவற்றின் கலவைகள் பெரும்பாலும் வெப்பாற்றிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன

cooling fixture; (குழை) குளிர் காலம்: வார்ப்படம் செய்த வடிவினை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளக்கூடிய உலோகத்தாலான அல்லது மரத்தாலான ஓர் அச்சுக் கட்டை, ஒரு வார்ப்படத்தை வார்ப்பிலிருந்து அகற்றிய பிறகு, அது மேலும் உருத்திரிபு கொள்ளாமல் தனது வடிவை நிலை நிறுத்தி வைத்துக் கொள்கிற வரையிலும் உரிய வடிவில் அல்லது துல்லியமான பரிமாணத்தில் அதனை வைத்திருக்க இது பயன்படுகிறது

coolings system: (தானி) குளிர்விப்பு அமைப்பு : எஞ்சினில் கனற்சியினால் உண்டாவதை விரைவாக வெளியேற்றுவதன் மூலம் எஞ்சினில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாகாமல் தடுக்கும் சாதனங்கள், கதிர்வீசிகள், விசிறிகள், இறைப்பிகள், நீர் காப்பு மேலுறைகள் முதலியவை இந்தச் சாதனங்களாகும்

coordinate: (கணி) ஆயத் தொலைவு: கட்டநிலை அளவையின் ஒரு கூற்றளவை

Cooper-Hewitt lamp : கூப்பர் ஹெவிட் விளக்கு : 110 மின்னழுத்த நேரடி மின்னோட்டச் சுற்றில் இயங்கும் ஒரு திறன் வாய்ந்த விளக்கு. இதில் குறைந்த ஆவி அடர்த்தியுள்ள பாதரச ஆவியைக் கொண்ட பல அடி நீளமுடைய ஒரு கண்ணாடிக் குழாய் இதில் அமைந்திருக்கும்

copal varnish: குங்கிலிய வண்ண மெருகெண்ணெய்: வெப்பமண்டல மரவகைகளின் பிசினிலிருந்தும், புதை படிவமாகவும் கிடைக்கும் கடினமான ஒளி ஊடுருவக்கூடிய குங்கிலியத்திலிருந்து தயாரிக்கப்படும் வண்ண மெருகெண்ணெய்

cope: மேற்கட்டி : களிமண் வார்ப்படத்தின் மேற்பகுதி அல்லது பசு மணல் வார்ப்படத்தின் மேலுறை

Coped joint: (க.க) முகட்டு இணைப்பு: வார்ப்படம் செய்து இணைக்கப்பட்ட பகுதி களிடையே ஒர் உறுப்பின் வார்ப்புப் பகுதியை ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றொரு உறுப்பின் பகுதியைச் செதுக்கி அமைக்கப்பட்ட ஓர் இணைப்பு

copper clad : (மின்.) செப்புப் பொதிவு : மின் கடத்து திறனை அதிகரிப்பதற்காக எஃகுக் கம்பியை செம்புப்படலத்தால் பொதிவு செய்தல்

copper engraving : (வரை) செப்புச் செதுக்கு வேலைப்பாடு : செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல்