பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
187

coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது

copper losses : (மின்.) செப்பு இழப்பீடு : மின்னோடிகள், மின்னாக்கிகள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் கம்பித்தடை காரணமாக வெப்ப இழப்பு ஏற்படுதல்

coping : (க.க.) சாய்முகடு : மதிலின் சாய்வான மேல் முகடு

coping machine : (பட்.) சமன எந்திரம் : உத்தரங்களின் விளிம்புகளையும் முனைகளையும் செதுக்கிச் சமனப்படுத்தவும், முனைகளை வளைக்கவும் பயன்படும் எந்திரம்

coping out : (வார். ) சமனச் செதுக்கல் : வார்ப்படத்தை முறையான பிரிக்கும் கோட்டிற்குக் கொண்டு வருவதற்காக அதன் இழுவைப் பகுதியின் மணல் முகப்பினைச் செதுக்கிவிடுதல், இவ்வாறு செய்யப்படும் பள்ளத்திற்கு நேரிணையான மணற் பிதுக்கம். மேற்கட்டியின் முகப்பிலிருந்து அமைந்திருக்கும்

coping saw : (மர; வே.) சமன ரம்பம் : இது 3 செ.மீ. அகலமும் 16.5 நீளமும் உடைய ஒரு குறுகிய அலகினைக் கொண்டிருக்கும். இது வில் போன்ற எஃகுச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இது வளைவுகளை வெட்டவும் வார்ப்படங்களைச் செதுக்கிச் சமனப்படுத்தவும் பயன்படுகிறது

copolymer : (குழை.) கூட்டு மிச்சேர்மம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களின் ஒரே சமயத்து மீச்சேர்ம இணைவு மூலமாக உண்டாகும் பொருள். இது தனித்தனி மீச்சேர்மங்களின் கலவை அன்று. மாறாக, ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்

copoly - merization : (வேதி. குழை.) கூட்டு மீச்சேர்ம இணைவு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எண்முகச் சேர்மங்கள் வேதியியல் வினைபுரிந்து அவற்றின் மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து பெரிய மூலக்கூறுகளாக உருவாதல் (பார்க்க: மீச்சேர்ம் இணைவு)

copper : (உலோ.) செம்பு/தாமிரம் : இது மென்மையான எளிதில் கம்பியாக நீட்டக்கூடிய,தகடாக்கத்தக்க ஒர் உலோகம். இது கடினமானது. ஆனால் வலுவானது அன்று; உலோகக் கல்வைகள் தயாரிப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. கலை வேலைப்பாடுகளில் பயன்படுகிறது

copper bit : (கம்.) பற்றாசுக் கோல் : பற்றவைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி

copper gasket : (தானி.மின்.) செப்பு முத்திரை : ஒன்றாக இணைக்கப்படும் இரு உலோக முகப்புகளுக்கு முத்திரையிட்டு மூடுவதற்காகப் பயன்படும் செம்பினாலான் அல்லது செம்பும் கல்நாரும் கலந்த கலவையினாலான அல்லது ஒரு வளையும் தகடு

copper lead (உலோ.) செப்பு ஈயம் : இது ஒர் உலோகக் கலவை, இது அதிக அழுத்தத்தையும் அதிக