பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
190

core saturation : (மின்.) உள்ளீட்டுச் செறிவு : ஓர் இரும்பு உள்ளீட்டில் நேரடியாக மின்னோட்டம் காரணமாக மூலக்கூறுகள் ஒரே திசையில் ஒருமுகமாகும் போக்கு

core wash : (வார்.) உட்புரிப் பூச்சு : உட்புரிகளின் வண்ணம் பூசுவதற்குப் பயன்படும் ஒரு கலவை

coring out: (வார்.) உள்ளிடகற்றுதல் : வார்ப்படங்களில் உட்புரிகள் மூலம் உட்பகுதிகளை அமைத்தல்

coring up: உட்புரியாக்கம் : வார்ப்பட வேலையில், வார்ப்புக்கு ஆயத்தமாகவுள்ள வார்ப்படத்தில் உட்புரிகளை அதனதன் இடத்தில் அமைத்தல்

corinthian order : (க.க.) கோரிந்து பாணி : கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த கட்டிடக் கலைப்பாணி. இதில் தூண் தலைப்புகளை அலங்காரம் செய்வதற்கு முள்ளிலை வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

corner bead : (க.க.) மூலைக் குமிழ்மணி : சாந்து பூசிய மூலைப் பகுதிகளில் பதிக்கப்படும் ஒரு உலோகக் குமிழ்மணி. சாந்துப் பூச்சு உடைந்து விழாமல் தடுக்க இது பயன்பட்டது

corner bit brace : (மர.வே.) மூலைத் திருப்புளி : வழக்கமான திருப்புளியினை வைத்துச் செயற்பட முடியாத கடினமான நிலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திருப்புளி

corner clamp : (மர.வே.) மூலைப் பற்றுக் கட்டை : பசையிட்டு ஒட்டுதல் அல்லது ஆணியடித்தல் போன்றவற்றுக்கு செங்கோண இணைப்புகளை உரிய இடத்தில் பிடித்துக் கொள்வதற்கான ஒரு பற்றுக்கட்டை

corner rounding cutter : (எந்.) மூலை உருளை வெட்டி : உருளை வடிவான முனைகளை வெட்டுவதற்கு உலோகத் தகட்டில் பள்ளங்கள் வெட்டுவதற்கான எந்திரத்தில் பயன்படும் சாதனம்

corner trowel : (குழை.) மூலைச் சட்டுவக் கரண்டி : மூலைகளில் பயன்படுத்துவதற்க்காக V - வடிவ அலகுடைய சாந்து பூசும் சட்டுவக்கரண்டி. இதில் உட்புறமும் வெளிப்புறமும் தோரணிகள் அமைந்திருக்கும்

cornice : (க.க.) எழுதகம் : கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கம்

cornice brake : எழுதகத் தடைக்கருவி : திறப்புடைய குறுக்கு அடிக் கட்டையும், அலகுகளும் உடைய ஒரு தரைத் தடைக் கருவி. இதில், ஒரு கட்டுத் தளையினை அல்லது ஒரு மடிப்புச் சலாகையினைச் சார்ந்து ஒர் உறுதியான நிலையில் உலோகத் தகடு அமைந்திருக்கும். அதனைக் கொண்டு உலோகத்தை வளைக்கவோ மடிக்கவோ செய்யலாம்

cornucopia : வளமார் கொம்பு ': மலர்-கனி-பயிர் வளம் பொங்கி வழிவதாக வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக் கலம்

corollary : துணை முடிபு : தெளியப்பட்ட முடியிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் ஒரு துணை முடிபு

corona : (க.க.) ஒளிவட்டம் ': (1) தூணின் அகல் நெடுந் தலைப்பு (2) ஒர் உந்து ஊர்தியின் மூட்ட அமைப்பின் துணை மின்சுற்று