பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
195

crank shaper: (எந்.) திருகு விட்ட கரைசற் பொறி : ஒரு திருகு விட்ட இயக்க்த்தினால் செயற்ப்டும் திமிசு உடைய ஒரு கடைசல் பொறி

creator of an arc : (மின்.) சுடர் விளக்கு வளைவுக் குழி : ஒரு சுடர் விளக்கில் நேர்மின்வாய்க் கார்பனில் மின்னோட்டச் செயலினால் உண்டாகும் உட்புழையான துணி

crazing :வெடிப்பு :

(1) மட்பாண்டத்தில் ஏற்றத் தாழ்வான சுரிப்பு காரணமாக உண்டாகும் நுண்ணிய வெடிப்புத் தடங்கள். இது முறையின்றிச் சூடாக்குவ தாலும் உண்டாகிறது

(2) அதிக வண்ணமேற்றிய பூச்சு வண்ணம் அல்லது இனாமல் இன்னும் அதிக நெகிழ்வுடைய மேற்பரப்பில் பூசப்படும்போது ஏற்படும் மயிரிழை போன்ற வெடிப்பு. இது பின்னர் ஆழமான பிளவாக ஆகக்கூடும்

(3) பிளாஸ்டிக் பொருள்களின் மேற்பரப்பில் அல்லது உட்பகுதியில் உண்டாகும் நுண்ணிய வெடிப்புகள்

creasing' ; (அச்சு.)மடிப்பு வரையிடுதல் : கனமான அட்டையினை அல்லது மேலட்டையினை உடைந்துவிடாமல் மடித்து வரையிடுதல்

credence : குறுமேசை : திருக் கோயிலில் முந்திரித் தேறலும், ரொட்டியும் வைக்கப்படும் பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை

creep : (உலோ.) உருத்திரிபு : உயர்ந்த அளவு வெப்ப நிலையில், நிலையான பாரத்தில் எஃகு மெல்ல மெல்ல உருத்திரிபு கொள்ளுதல

creeper : (தானி. எந்.) தாழ் மேடை : உந்து வண்டியைப் பழுது பார்ப்பவர். உந்து வண்டியில் அடியில் வேலை செய்யும்போது படுத்துக் கொள்வதற்குப் பயன்படும் ஒரு தாழ்வான மேடை

creo-sote : (வேதி.). கீலெண் ணெய் : கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் விடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி. இது தொற்று நீக்கியாகவும் மரக்காப்புப் பொருளாகவும் பயன்படுகிறது

creo-soting : கீலெண்ணெய்ப் பக்குவம் : மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு வெட்டு மரத்தினைப் பக்குவம் செய்தல். இதன் மூலம் வெட்டுமரத்தின் உழைப்புக் காலம் அதிகரிக்கிறது

creo soting cylinder : கீலெண்ணெய்ப் பக்குவ நீள் உருளை இது வலுவான தேனிரும்பு நீள் உருளை யாகும். இதில் ரயில்_தண்டவாள்ங்களில் ஈரம் வெளியேற்றப்பட்டு, அழுத்தத்தின் கீழ் கீலெண்ணெய் நிரப்பப்படுகிறது

crepe grain : கரண்பரப்பு : மெல்லிய சுருக்கமுடைய மேற்பரப்பு

cresting : (க.க.), :முகடு:ஒரு கட்டிடத்தின் சுவரில் அல்லது மோட்டுவரையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடு

crest of screw thread : (எந்..) திருகிழை முகடு : ஒர் இழையின் இரு பக்கங்களையும் இணைக்கும் உச்சப் பரப்பு

cretonne : முரட்டுத்துணி; சலவை யற்ற முரட்டு அச்சடித்த துணி

crewel work : திரைச் சித்திர வேலைப்பாடு : முறுக்கப்பட்ட மெல்லிய கம்பிளி நூலைக் கொண்டு துணி மீது செய்யப்படும் சித்திர வேலை

crimping : (பட்.) சுருள்வித்தல்: விரும்பிய வடிவில் சுருட்டி வளைத்து மடித்தல்