பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
196

crimping machine : சுருள் விப்புக் கருவி : குஞ்சங்களின் மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான எந்திரம்

cripple rafter : ( க.க. ) சார இறைவாரக் கைமரம் : கட்டிடத்தின் பக்கத்துக்கு இடப்படும் மூட்டு

criterion : அளவைக் கட்டளை : ஒப்பீடு செய்வதற்குரிய ஒரு கட்டளை விதி

critical altitude : (வானூ.) மாறுநிலை உயரம் : ஒர் எஞ்சினின் உள்ளிழுப்பு பல்வாயிற் குழாயில், மதிப்பீடு செய்த விசை அளவுடனும், கடல்மட்ட வேகத்திலும் சாதாரணமாக இயங்கும் அளவுக்குச் சமமான ஒர் அழுத்தத்தை நிலைநாட்டும் வகையில் ஓர் அதிவேகப் போர் விமானம் பறக்கும் உச்ச அளவு உயரம்

critical angle : (வானூ.) மாறு நிலைக் கோணம் : ஒளிக்கதிர் கோடு நிலையிலிருந்து திரிநிலைக்கு மாறும் கோணம்

critical speed : (வானூ.) மாறு நிலை வேகம் : கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு இயல்விக்கும் வகையில் ஒரு விமானம் பறக்கின்ற மிகக் குறைந்த வேகம்

critical temperature: (எந்.) மூட்டு பதன்: அழுத்தத்தால் மட்டும் நீர்மமாக்க முடியாத நிலையுடைய வாயுவின் தட்பவெப்ப நிலையளவு

critical angle : மாறுநிலைக் கோணம் : ஒளிக்கதிர்க் கோடு, நிலைலயிலிருந்து திரிநிலைக்கு மாறும் கோணம்

crockery : மட்பாண்டம் : சுட்ட களிமண் கலங்களின் தொகுதியைக் குறிக்கும் சொல்

crocking : சாயத்தேய்ப்பு: சாயம் தோய்த்த பொருளிலிருந்து திருத்தமாக இல்லாத சாயத்தைத் தேய்த்து அப்புறப்படுத்துதல்

crocus cloth : மெருகுத் துணி:தூளாக்கி இரும்பு ஆக்சைடு ஒட்டப்பட்டுள்ள துணி. இது மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது

crookes tube; (மின்.) ஒளிக்கதிர்க் கோட்டக் குழாய் : ஒளிக்கதிர் உயர் கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல்

crookes's vacuum : முனைப்பு வளி நீக்க இடைவெளி

crookes rays: எதிர்மின் வாய்க் கதிர்கள்

crop; (தோல்.) பதனிட்ட மாட்டுத் தோல் :

(1) செருப்பு முதலானவற்றின் காலடித் தோலுக்காகத் தயாரிக்கப்படும் பதனிட்ட முழு மாட்டுத் தோல்

(2) விளிம்புவெட்டு : அச்சு மறுபடி எடுப்பதற்காக ஒர் அச்சுத் தகட்டினை தேவையான வடிவளவுடன் வெட்டி எடுத்தல்

cropper : (எந்.) கத்தரிப்பான் : சலாகைகள் முதலியவற்றை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு வகைக் கத்தரிப்பான்

cropping: கத்தரித்தல்: துணியின் மேற்பரப்பினைக் கத்தரித்தல்

cross (கம்.) குறுக்கு வெட்டுக் குழாய் : இரு இனைக் குழாய்களை அவற்றின் செங் கோணங்களில் இருக்குமாறு நான்கு கிளைகளாகக் குறுக்கு வெட்டாகப் பொருத்துதல்

cross belt;(எந்.) குறுக்குப்பட்டை: ஒரு கப்பியின் மேற்பகுதிக்கு மாறி திசையை எதிர்மாறாக்கும் வகையில் ஒடுகிற பட்டை