18
ஒரு மாறுதலை உண்டாக்கும் ஒரு நிகழ்ச்சி
adherence : ஒட்டுதல் : மாறுபட்டதுகள்கள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டிருக்கிற அல்லது ஒட்டிக் கொண்டிருக்கிற தன்மை
adhesion or adhesive power: (எந்.) அயற்பரப்பொட்டு அல்லது ஒட்டுந்திறன்: (1) எந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்க வைக்கும். அது தொட்டுக் கொண்டிருக்கும் பரப்புக்குமிடையில் இருந்து வருகிற உராய்வு
- (2) ஒரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தனமை.
- (3) குழைமவியலில், இரு முகப்புகள். ஒரு கரைசலினால் மெருகூட்டப் பெற்றபின்பு, ஒரு குழைமத்தினால் இணைக்கப்பட்டிருக்கும் நிலை
adjacent: angle: (வரை) அண்டைக்கோணம்: வடிவ கணிதத்தில், இரு கோணங்களுக்கு ஒரு பக்கம் பொதுவாக இருக்குமானால், அந்த இரு கோணங்களும் அண்டைக் கோணங்கள் எனப்படும்
adjacent-channel interference (மின்.) அண்டை அலை வரிசை இடையீடு : தொலைக்காட்சி போன்றவற்றில் உள்ள அதிகாரம் பெற்ற அண்டை அலை வரிசையிலிருந்து எழுகிற ஒரு சைகையினால் உண்டாகும் இடையீடு
adjust : சீரமைவு செய் : தொடர்பு நிலை, இருப்பு நிலை, பொருத்த நிலை போன்றவற்றுக்குத் தக்கவாறு உறுப்புகளைப் பொறுத்தமாக அமைத்துக் கொள்ளுதல்
adjustable boring tool: (எந்.) சீரமைவு செய்யத்தக்க துணைக் கருவி : வெட்டுக் கருவியையும், கைப்பிடியையும் மாற்றாமலே வெவ்வேறு பணிக்கேற்ப வெட்டுக் கருவியைப் பொருத்தக்கூடிய கருவி
adjustable condenser : (மின்.) சீரமைவு செய்யத்தக்க மின் விசையேற்றி : இயங்கக்கூடிய தகடுகளின் வாயிலாக, மாறுபட்ட தேவைகளுக்கேற்ப விசையேற்றும் திறனை மாற்றியமைக்கக்கூடிய ஒரு மின் விசையேற்றி
adjustable parallels : (எந்.) சீரமைவு செய்யத்தக்க இணைக்கம்பிகள் : ஆப்பு வடிவ இரும்பு இணைகம்பிகள். இதில் ஒரு கம்பியின் மெல்லிய முனை மற்றொன்றின் தடித்த-மூனையுடன் பொருத்தப்பட்டிருக்கும், மேல் கம்பியின்
முகப்பும், கீழ்க்கம்பியின் அடி முகப்பும் இணையொத்ததாக அமைந்திருக்கும். எனினும், இரு முகப்புகளுக்குமிடையிலான தூரத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இவ்விரு கம்பிகளும் விலகி விடாமல் தடுப்பதற்காக, இரண்டும் ஒரு திருகாணி வாயிலாகப் பூட்டப்பட்டிருக்கும்
adjustable pitch propeller; (வானூ.) சீரமைவு செய்யத்தக்க உந்து சுழல் விசிறி : இந்தச் சுழல் விசிறியின் குடத்தில், இயங்காத நிலையில், தேவையான எந்த உந்துதலுக்கும் ஏற்ப அலகுகளை இணைத்துக் கொள்ளலாம்
adjustable reamer : (எந்.) சீரமைவு செய்யத்தக்க துனைச் சீர்மி : ஒரு மைய மரையாணி அல்லது திரு காணி வாயிலாக வடிவளவினைப்