பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
198

போன்ற ஓர் இணைப்பு, இதில் தனியொரு கம்பிக்குப் பதிலாக இரு கம்பிகள் பிரதானக் கடத்தியில் நுழைக்கப்பட்டிருக்கும்

crosstying springs : ஆதாரக்கட்டு சுருள்வில் : கரடுமுரடான திரைச்சீலைகளில் தொய்வு ஏற்படாமல் தடுப்பதற்காக அமைக்கப்படும் சுருள்வில் அமைப்புமுறை. இது திண்டுமெத்தை அமைப்புக்கு உறுதிப்பாட்டினை அளிக்கிறது

cross valve : (எந்) குறுக்கு ஓரதர் : ஒரு குறுக்குக் குழாயில் பொருத்தப்பட்டுள்ள ஓரதர். இணையாக உள்ள இரு குழாய் இளுக்கிடையில் வேண்டுகிற போது தொடர்பு ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. எண்ணெய் மற்றும் நீர் இறைப்பு நடவடிக்கைகளில் மிகுதியாகப்பயன்படுகிறது

cross-wind force: (வானூ) குறுக்குக் காற்று விசை : விமானத்தின் மீது அல்லது அதன் ஏதேனும் பகுதி மீது தாக்கும் மொத்தக் காற்று விசையின் உயர்த்து விசைக்கும் இழுவை விசைக்கும் செங்குத்தாகச் செயற்படும் அமைப்பான்

crotch vaneer: (மர.வே.) கவட்டு மேலொட்டுமானம் : மரக் கவட்டிலிருந்து அல்லது ஒன்றாக இணையும் நூதனமான கரண்பரப்பினைக் காட்டும் இரட்டை மரங்களிலிருந்து வெட்டப்பட்ட மேலோட்டுமானப் பலகை

crowbar : கடப்பாரை : நெம்பு கோலாகப் பயன்படும் இறுதி வளைந்த இரும்புக் கம்பி

crown : மேற்கு வடு: (1) தளமட்டத்தின் உயர்ந்த பகுதி. சாலைமையம் என்றும் கூறப்படும்

(2) கட்டிடக் கலையில் எழுதகத்தின் உச்சி உறுப்பு

(3) குழாய் அமைப்பு வேலையில், குழாயில் நீர்பாயும் திசையினை மேல்நோக்கி பாயச் செய்யும் பொறியமைப்பின் பகுதி

(4) மட்பாண்டக் கலையில், சூளையின் மேற்கவிந்த கூரை

crown molding: (க.க) இரட்டை முகப்பு வளைவு : வளைவான இரட்டை முகப்புடைய ஒரு வளைவு. இதில் அடைப்புடைய எழுதகத்தில் மேல் உறுப்பு, மேற் கூறையை அடுத்துக் கீழே அமைந்திருக்கும்

crown pulley:(எந்) மையக் கப்பி: முகப்பின் விளிம்புகளைக் காட்டிலும் மையத்தில் அதிக விட்ட முடைய ஒரு கப்பி. இந்த மையம், வார்ப்பட்டை கப்பியிலிருந்து நழுவிச் செல்லாமல் தடுக்கிறது

crow’s foot : (வானூ. )காகக் காற்குறி : தனியொரு வடத்திலுள்ள பாரத்தைப் பரவலாகப் பகிர்ந்தளிப்பதற்காகப் பல குறுகிய வடங்களை அமைக்கும் முறை

crucible : (வேதி) புடக்குகை: உலோகங்களை உருகவைக்கும் மட்கலம்

crucible furnace : (உலோ) புடக்குகை உலை : அலுமினியம். வெண்கலம், செம்பு போன்ற அறமல்லாத உலோகங்களை உருக்குவதற்குப் பயன்படும் வாயுவினால் எரியூட்டப்படும் உலை

crucible steel : மூசை எஃகு : ஒரு புடக்குகையில் (மூசை) மெல்லிரும்பினைக் கட்டு, அதனுடன் கட்டைக்கரியினை அல்லது தேனிரும்பு அல்லது கார்பன் நிறைந்த வேறு பொருளைச் சேர்த்து உருக்கித்