பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
199

தயாரிக்கப்படும் உயர்ந்த ரக எஃகு. இவ்வாறு தயாரிக்கப்படும் எஃகில் 0.75% முதல் 1.50% வரை கார்பன் கலந்திருக்கும். இந்த எஃகு வெட்டுக் கருவிகள், வார்ப்படங்கள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது

Crude oil : கச்சா எண்ணெய் : பூமியிலிருந்து இயற்கை நிலையில் எடுக்கப்படும் பெட்ரோலியம் இது பக்குவப்படுத்தப்படாமல் இருக்கும்

crushing strain; நொறுங்கு விசையழுத்தம் : ஒரு பொருள் அழுத்தப்படும் போது அதனை நொறுங்கச் செய்யும் விசையழுத்தம்

cryogenic propellamt : (விண்) உறைகலவை முற்செலுத்தி : மிகத்தாழ்ந்த வெப்ப நிலையில் மட்டுமே திரவ நிலையில் இருக்கும் ஒரு ராக்கெட் எரிபொருள்

cryogenics : (மின்,) தாழ்வெப்ப இயற்பியல் : மிகவும் தாழ்ந்த வெப்ப நிலையில் அதிகத் திறம் பாட்டினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் சுற்று வழிகள்

cryohydrate : (குளி.பத.) கிரையோ ஹைட்ரேட்: உப்பும் நீரும் கலந்த ஓர் உறை கலவை

cryometer: தாழ் வெப்பமானி: தாழ்நிலைத் தட்பவெப்பமானி

cryolite: பனிக்கல்: கிரீன்லாந்தில் எடுக்கப்படும், தொழில் துறைக்குப் பெரிதும் பயன்படும் பயனுடைய படிகக்கல்வகை. இது அலுமினியம், கண்ணாடி தயாரிக்கப் பயன்படுகிறது

crystal : (வேதி,) படிகக்கல்: மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம்

crystal control (மின்னி) படிகக் கட்டுப்பாடு : அமுக்க மின்னியல் படிகத்தைப் பயன்படுத்தி ஓர் அலைப்பியின் அலைவெண்ணைக் கட்டுப்படுத்துதல்

crystal diode : (மின்) படிக இருமுனையம் : நுண்ணலை நிகழ்வுகளில் திருத்தியமைக்கும் கருவியாகப் பயன்படுகிறது

crystal filter : (மின்) படிக வடிகட்டி : படிகக்கல் படிகங்களைப் பயன்படுத்தி மின்சுற்று வழியினை மிகத் துல்லியமாக ஒத்தியைவு செய்தல்

crystal lattice : (மின்) படிகப் பின்னல் : புறக்கோடி எலெக்ட்ரான்கள் இணை மின்மப் பிணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளின் கட்டமைப்பு

crystallization : (வேதி) படிக உருவாக்கம் : உருகிய அல்லது கரைந்த நிலையிலுள்ள ஒரு வேதியியற் பொருளைப் படிக வடிவில் தனியாகப் பிரித்தெடுத்தல்

crystallization of iron : இரும்புப் படிக உருவாக்கம்: முறையற்ற குளிர்விப்பு அல்லது சம்மட்டியடி காரணமாக இரும்பு உடையும் இயல்புடையதாதல்

c-stage resins: சி-நிலைப் பிசின்கள் : வெப்பமூட்டிய நிலையில் உருக்கொடுத்த பிசின்கள், எதிர் விளைவுகளின் இறுதிக்கட்டத்தை எட்டுதல். இந்த நிலையில்,உருக்க முடியாததாகவும், கரைக்க இயலாததாகவும் இருக்கும்

cuban mahogany : கியூபா சீமை நூக்கு: வாணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வகைச் சீமை நூக்கு மரம். இதன் வெட்டு மரம் மிகக் கடினமானதாயும், அடர்கரிய நிறமுடனும் இருக்கும். அறைகலன்கள் தயாரிக்க மிகுதியும் பயன்படுகிறது