பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200

cube : கனசதுரம் : (1) ஆறு சம சதுர முகங்களையுடைய திண்ம உரு. இதில் எல்லாக் கோணங்களும் செங்கோணங்களாக இருக்கும்

(2) மும்மடிப் பெருக்கம் : கணிதத்தில் ஓர் எண்ணின் மும்மடிப் பெருக்கமாகிய எண்

cube root : மும்மடிப் பெருக்க மூலம் : மூன்று காரணிகளாகக் கொண்டு பெருக்கிய ஓர் எண். இந்த மூன்று காரணிகளின் பெருக்கல் எண் மும்முடி எனப்படும்

cubical content : கனசதுரக் கொள்ளளவு: ஒரு கலம் உட்கொள்ளும் கன அளவு, கட்டிடங்களின் கட்டுமானச் செலவினைக் கணக் கிடுவதற்கு அடிப்படையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது

cubic measure: கன அளவு:

1728 கன அங்குலம் = 1 கன அடி

27 கன அடி = 1 கன கஜம்.

231 கன அங்குலம் = 1 காலன்

128 கன அடி = 1 கார்ட்

cubic meter : கன மீட்டர் : மெட்ரிக் அளவை முறையில் கன அளவின் அலகு. இது m3 எனக் குறிக்கப்படும்

cueing : (மின்) ஒருவழித் தொலைபேசி : செயல் திட்டங்களைக் கட்டுப்படுத்தவும், தொழில்நுட்ப அலுவலர்களுக்கு அறிவுறுத்தவும் பயன்படும் ஒரு வழித் தொலைபேசித் தொடர்பு

culm நிலக்கரித் தூள் : நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் தூசு மற்றும் அயல் பொருள்கள்

cultivator: சாகுபடிக் கருவி: நிலத்தைக் கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி

culvert : பாலம் : ஒரு சாலையின் கீழ் தண்ணீர் செல்வதற்காக அமைந்த மூடிய கால்வாய்

cumar : கூமர் : கீல் எண்ணெய் வடிபொருளிலிருந்து கிடைக்கும் செயற்கைப் பிசின். இது மின்காப்பியாகவும், வண்ணப் பொருள்களிலும், அச்சு மையிலும் பயன்படுத்தப்படுகிறது

cumulative : அடுக்குத் திரள்: அடுக்கடுக்காகச் சேர்த்துப் படிப்படியாகத் திரண்டு வளர்கிற

cup center : (எந்) கிண்ண மையம் : மரக்கடைசல் எந்திரத்தில் கடை முளையில் பயன்படுத்தப்படும் மையம். இதனை இறுதி மையம் என்றும் கூறுவர்

cup chuck: கிண்ண ஏந்தமைவு: முனை நுண்கடைசல் வேலையில் பயன்படுத்தப்படும் ஆழமான உட்புழைவுடைய, கடைசற் பொறியின் ஏந்தமைவு

cup grease : கிண்ண மசகு: ஓர் உராய் பொருளாகப் பயன்படும் கனத்த உடலுடைய, ஓரளவுத் திடமான மசகுப் பொருள்

cup joint : கிண்ண மூட்டு : அண்டைக் குழாயின் கூர்நுனியைப் பொருத்துவதற்கு ஏற்ற அளவுக்கு வாய் அகன்று இருக்கிற குழாயில் ஒரு குழாயினை இணைத்தல்

cupola : (க.க.) தூபிமாடம் : (1) ஒரு கட்டிடத்தின் கூரைக்கும் மேலுள்ள ஒரு கீறிய தூபி

(2) வார்ப்பட அடுப்பு : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அடுப்பு

cup leather: (எந்) உறைத் தோல்: நீரியல் எந்திரங்களின் உந்து தண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் தோலுறை