பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
203

களை அல்லது வேறேதேனும் அதிர்ச்சி தாங்கிகளை அமைத்தல்

cusp: சாய்முகடு: மத்திய காலத்து கல்சித்திர வேலைப்பாடுகலுள்ள ஒரு கவடு அல்லது முனை

cut (அச்சு.) செதுக்குச் சித்திரப் பாளம்:

(1) செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கிய பாளம் அல்லது தகடு

(2) மரத்தில் அல்லது உலோகத்தில் வேலை செய்வதற்குரிய எந்திரங்களில் வெட்டப்பட்ட துண்டு களிலிருந்து சிம்புகளைச் சீவி எடுத்தல்

cut cards: (அச்சு) வெட்டிய அட்டைகள்: வேண்டிய வடிவளவுகளில் வெட்டப்பட்ட அட்டைகள்

cut flush: செப்பமாக்குதல்: துண்டு வெளியீடுகளின் அட்டை விளிம்புகளைச் சீராக வெட்டிச் செப்பமாக்குதல்

cut gears: வெட்டுப் பல்லிணைகள்: எந்திரத்தினால் வெட்டப்பட்ட பற்களைக் கொண்ட பல்லிணை. இது வார்ப்புப் பல்லிணைகளிலிருந்து வேறுபட்டது

cut-in note or side note: (அச்சு) ஓரக் குறிப்பு: அச்சடித்த பக்கத்தின் ஓரத்தில் சிறிய எழுத்தில் அச்சிடப்படும் குறிப்பு.பொதுவாகப் பாடநூல்களை அச்சிடுவதில் இது கையாளப்படுகிறது

cutlery: வெட்டுக் கருவிகள்: வெட்டுக் கருவிகளின் தொகுதியை இது குறிக்கிறது. எனினும்,பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் கருவிகளையே இது குறிக்கும்

cut nails : (தச்சு) வெட்டு ஆணிகள்: எந்திரத்தினால் வெட்டப்பட்ட இரும்பு ஆணிகள். இது இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கம்பி ஆணிகளிலிருந்து வேறுபட்டது

cut of file : அரத்தின் வெட்டு முறை : ஓர் அரத்தின் முகப்பு வெட்டப்படும் முறை. இதனைக் கொண்டு ஓர் அரம், சமதள அரம், உராய்வு அரம் போன்ற பெயர்களைப் பெறுகிறது

cut off : இணைவுக் கோடு : ஒரு வார்ப்படத்தின் இரு பகுதிகளும் ஒன்றாக இணையும் கோடு. இதனைக் கூடல் கூர்வரை அல்லது கூடல் சால்வரி என்றும் கூறுவர்

cut off rule: (அச்சு) இடைவரித் தகடு : செய்தி இதழ்களில் அல்லது பருவ இதழ்களில் விளம்பரங்களைத் தனியே பிரித்துக்காட்டப் பயன்படும் இடைவரித் தகடு

cutout : (மின்.) வெட்டுவாய் : ஒரு மின்சுற்று வழியில் மின்னோட்டம் பாதுகாப்பு வரம்புக்கு மேல் உயரும்போது அந்தச் சுற்று வழியினைத் திறப்பதற்கான ஒரு சாதனம். இது இரு வகைப்படும்

(1) மின்காந்தம். இது முறிப்பான் என்றும் அழைக்கப்படும்

(2) வெப்பத் தடை. இது பல்வேறு வகை உருகிகளில் ஒன்று

cutout box: (மின்.) வெட்டுவாய்ப் பெட்டி : உருகித் தொகுதிகளைக் கொண்டிருக்கிற ஒரு பெட்டி

cutout relay : (தானி.எந்) வெட்டுவாய் உணர்த்தி : ஒரு மின்னாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தானியங்கும் காந்த விசை. மின்கலத்தில் அளவுக்கு அதிகமாக மின்னேற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மின்னாக்கி மின்சுற்று வழியின் இணைப்பைத் துண்டிக்க இது பயன்படுகிறது

cutter : (எந்.) வெட்டுக் கருவி : மரத்தை அல்லது உலோகத்தைத் தானாகவே வெட்டுவதற்காக, ஓர் எந்திரத்துடன் அல்லது பிடிப்பானுடன் பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் வெட்டுக்கருவி