பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
204

cutting angle : (எந்) வெட்டுக் கோணம் : ஒரு கருவியின் வெட்டு முகத்திற்கும், அந்தக் கருவி எந்தப் பொருளின் மேல் இயங்குகிறதோ அந்தப் பொருளின் மேற்பரப்புக்கு மிடையிலான கோணம்

cutting compound : (வெப்) வெப்பாற்றுக் கூட்டுப் பொருள்: வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்பத் தணிப்பதற்குப் பயன்படும் பன்றிக் கொழுப்பு எண்ணெய், சோடா நீர் போன்ற பல்வேறு வகை வெப்பாற்றிப் பொருள்களில் ஒன்று

cutting face : (எந்) வெட்டு முகப்பு : வெட்டப்படும் பொருள் எந்த வெட்டுக்கருவிக்கு எதிராக நகர்த்தப்படுகிறதோ அந்த வெட்டுக் கருவியின் முகப்பு

cutting gauge : வெட்டு அளவி : வெட்டுக் கருவியில் ஒரு குறியீடு கருவிக்குப் பதிலாகப் பொருத்தப்பட்டுள்ள ஓர் அளவு கருவி

cutting nippers : வெட்டுப்பற்றுக் குறடு : பல்லால் பற்றிக் கொள்ளும் அமைப்புடைய ஒருவகைச் சாமணம்

cutting oils : (எந்) வெப்பாற்று எண்ணெய்கள்: வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்பத் தணிப்பிற்குப் பயன்படும் கனமான எண்ணெய்கள் அல்லது எண்ணெய்களின் கலவைகள். வெப்பாற்றுப் பொருள்களாக பயன்படும் நீர்கரைசல்கள் இதில் உள்ளடங்காது

cutting out ; (தானி.எந்) மின்சுற்று முறிப்பு: (1) ஒரு மின்சுற்று வழியில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம் எட்டியது. சுற்றுவழியினை முறிக்கிற உணர்த்துச் செயல்

(2) அழுத்தத்தை அல்லது தொடர்பினை மையவிலக்கு ஊடிணைப்பி விடுவிக்கிற முனை

cutting pliers: வெட்டுச் சாமணங்கள் : குறடு போல் பற்றிக் கொள்வதற்கான தட்டையான தாடைளுடன்,கம்பிகளை வெட்டுவதற்கான வெட்டு அலகுகளையும் கொண்ட சாமணங்கள்

cutting rule : (அச்சு) வெட்டுப்பட்டை : தாள்,அட்டைகள் முதலியவற்றை வெட்டுவதற்கும், அச்சுப் பக்கங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படும் எஃகினாலான பட்டைகள்

cutting tools: வெட்டுச் சாதனங்கள் : எந்திரங்களில் பயன்படும் கூர் விளிம்புகளுள்ள சாதனங்களை முக்கியமாகக் குறிக்கும்

cutting up : (எந்) குறுகத் தரித்தல்: அறுக்கும் எந்திரத்தில் அறுக்கப்படும் பொருளின் குறுக்காக வெட்டுக் கருவி கீழிருந்து மேலாகச் சென்று குறுக்காகத் தரித்தல்

cyanide : (வேதி.) சயனைடு ; பொதுவாகப் பொட்டாசியம் சயனைடு என்னும் வேதியியற் பொருளைக் குறிக்கும்.மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. வெள்ளைத் தூளாக அல்லது துண்டுகளாகக் கிடைக்கும். தாதுப் பொருள்களிலிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுக்கவும், மின்முலாம் பூசுவதிலும், எஃகினை வெப்பத்தால் பக்குவப்படுத்துவதிலும் பயன்படுகிறது.

cyaniding : பரப்புக் கடினமாக்கல்: ஓர் உலோகக் கலவையின் மேற்பரப்பினை ஓர் இரும்பு ஆதாரப் பொருளுடன் சேர்த்து கடினமாக்கும் செய்முறை. இதில் உலோகக் கலவை, சயனைடு உப்புடன் சேர்த்து பொருத்தமான வெப்ப