பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
205

நிலையில் சூடுபடுத்தப்பட்டு, பின்னர் குளிர்விக்கப்படுகிறது

cybernetics : (மின்) சைபர்னெட்டிக்ஸ் : சிக்கலான கணிப்பொறி அமைப்புகள் குறித்தும், மனித மூளையுடன் அவற்றின் தொடர்பு பற்றியும் ஆராய்தல்

cycle : (மின் எந்.) சுழற்சி : (1) ஒரு முடிவுற்ற வட்டமாக அமைகிற முழுநிலைத் தொடர் வரிசை. இதில் இரண்டு அல்லது நான்கு சுழற்சி இயக்கியில் இருப்பது போன்று, ஒரு வரிசை முடிகிற போது மற்றொரு வரிசை தொடங்கும். ஒவ்வொரு நேர்விலும் ஒரு தொடரினை முழுமையாக்குவதற்குத் தேவைப்படும் உந்து தண்டின் வீச்சுகளின் எண்ணிக்கையினைப் பொறுத்து இரு சுழற்சி அல்லது நான்கு சுழற்சி என்று அழைக்கப்படுகிறது

(2) பிளாஸ்டிக் வேலையில், ஒரு செய்முறையின் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த நடவடிக்கையின் அதே கட்ட வரையிலான முழுமையான நிகழ்ச்சி

cyclogiro : (வானூ.) நிமிர் விமானம் : தலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் செங்குத்தாக மேலெழுந்து உயர்ந்து செல்லும் விமானம்

cycloid : வட்டப்புள்ளி நெறி வளைவு : வட்டத்தின் மீதோ, எல்லையிலோ, உள்ளோ உள்ள புள்ளி வட்டம் நேர்வரை மீது உருளும் போது செல்லும் நெறிவட்டம்

cyclothymiz: (உள.) சைக்ளோத் திமிஸ்: மிகுந்த மனக்கிளர்ச்சியையும் பின்னர் மிகுந்த மனச் சோர்வையும் மாறி மாறி உண்டாக்கும் மனக்கோளாறு

cyclo-tron : (மின்) சைக்ளோட்ரான் : அனுப்பிளப்பிலும் செயற்கைக் கதிரியக்க ஆக்கத்திலும் பயன்படுத்தப்படும் மின்காந்த விரைவூக்கக் கருவி

cylinder: நீள் உருளை: இரு கோடிகளும் இடைவெட்டும் பரப்புகளும் வட்டமாகவோ ஒழுங்குடைய பிற வளைவாகவோ அமையும் நீள் தடி உருளை

cylinder block : (தானி) நீள் உருளை உறை : (1) உந்துதண்டுகளை ஏற்பதற்குத் துளையிடப்பட்ட எஞ்சினின் பிரதான உடற்பகுதி. நீள் உருளைக் கட்டையும், வணரிப்பெட்டி ஆகியவை ஒரே தொகுதி நீள் உருளைத் துளையாக வார்க்கப்படுகின்றன

(2) ஓர் எஞ்சின் நீள் உருளையின் உட்புற விட்டம்

cylinder bore: (தானி) நீள் உருளைத் துளை: எஞ்சின் நீள் உருளையின் விட்டம்.

cylinder head: நீள் உருளை மேல் மூடி: உள்வெப்பாலை நீள் உருளையின் மேல்மூடிப் பகுதி

cylinder oil : நீள் உருளை எண்ணெய்: 5%-15% விலங்கு அல்லது தாவர எண்ணெய்கள் கொண்ட கனிம எண்ணெய்களின் கலவை

cylinder press : (அச்சு) நீள் உருளை அச்சு எந்திரம் : நீள் உருளை, தட்டையான படுகை, தானே மைபூசும் சாதனம் ஆகியவற்றைக் கொண்ட ஓர் அச்சு எந்திரம்

cylindrical gauge : (எந்) நீள் உருளை அளவி : இரு உறுப்புகளைக் கொண்ட ஓர் அளவி. இதில் ஒரு கைபிடியுள்ள ஓர்