பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

அடைப்பு அளவியும், அந்த அடைப்பு அளவியைப் பொருத்தி வைக்கக்கூடிய ஒரு குளிர்ப்பி அளவியும் அமைந்திருக்கும். துளையிட்டு, கடைசல் செய்யப்பட்ட உறுப்புகள் ஒன்றோடொன்று பொருந்துகின்றனவா எனச் சோதிக்க இந்த அளவிகள் பயன்படுகின்றன

cylindroid : (வேதி) நீள் உருளை உரு: நீள் உருளை போன்ற வட்டுரு

cyma : (க.க.) பாம்பு முகப்பு : பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு. இதில் உள்வளை பாம்பு முகப்பு புறவளை பாம்பு முகப்பு என இருவகை உண்டு. உள்வளை பாம்பு முகப்பில், உள்வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு அமைந்திருக்கும். புறவளை பாம்பு முகப்பில், புற வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு அமைந்திருக்கும்

cymatium : (க.க.) புறவரை முகடு : ஒரு புறவரை வளைவினையுடைய ஓர் எழுதகத்தின் பகுதி

cypress : சைப்ரஸ் மரம் : கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம். இது தென்அமெரிக்காவில் வளர்கிறது. நெடுங்காலம் உழைக்கும் வெட்டுமரம் உடையது. கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது