பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
209

data : (தானி.) செய்திக் குறிப்பு : எந்திரத்தின் இயக்கத்தைக் கணித முறையில் அல்லது அளவையியல் முறையில் உய்த்துணரப் பயன்படும் மூலகாரணத் தகவல்கள்

datamation : (தானி.) தகவல் இயக்கப்பொறி : கணிப்பொறிகள் அலுவலக தானியங்கியியல் பொறிகள் உட்படத் தகவல்களைத் தானாகக் கையாள உதவும் தானியங்கிப் பொறியமைவு

data processing : (தானி.) தகவல் பகுப்பாய்வு : தகவல்களைத் தேவையான நோக்கத்திற்குப் பயன்படும் வகையில் பகுப்பாய்வு செய்தல்

data reduction : (விண்.) செய்திக் குறைப்பு : செய்திக் குறிப்புகளைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்குக் குறைத்தல்

date datum : ஆதாரச் செய்தி : ஒரு பணியாற்றிய அட்டவணைப்படுத்திய புள்ளி விவரத் தகவல்களைக் குறிப்பவை

date line : தேதி எல்லைக் கோடு : உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 180° நிரை கோட்டினூடே செல்கிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு. இதன்படி, உலகைச் சுற்றிக் கிழக்கு நோக்கிச் செல்பவர் நேரம் கூடுவதாகக் காண்பார். மேற்கு நோக்கிச் செல்பவர் நேரம் குறைவதாகக் காண்பார். கிரீன் விச்சிவிருந்து ஏறத்தாழ 180° நிரை கோட்டில் உள்ள இந்தக் கோட்டிலிருந்து கிழக்கே செல்பவர் ஒரே தேதியில் இரண்டு நாட்கள் பெறுகிறார். மேற்கே செல்பவர் ஒரு நாளை இழக்கிறார்

datum : குறிப்புச் செய்தி : செய்திக் குறிப்புகளின் தொகுதி

datum line : ஆதாரக்கோடு : பரிமானங்கள் எடுக்கப்படுகிற அல்லது விளக்கவுரைக் கணிப்புகள் செய்யப்படுகிற் ஆதார அல்லது அடிப்படைக் கோடு

daubing : (வார்.) அரவை வண்ணப் பூச்சு : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில் சூடாக்கிய பிறகு உள் மையப் பகுதியிலுள்ள வெடிப்பு வண்ணம் பூசி அடைத்தல்

Davis apparatus : டேவிஸ் சாதனம் : நீரில் ஆழத்திலிருந்து வெளியே வருபவருக்குக் காற்று அளிப்பதற்குப் பயன்படும் கருவி. கடலில் ஆழத்தில் மூழ்கிய நீர் மூழ்கிக் கப்பல்களிலிருந்து வெளிவருபவர்களுக்குக் காற்று வழங்க இது பயன்ப்டுகிறது

Davy safety lamp : டேவி காப்பு விளக்கு : நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு

D-C : (மின்.) நேர் மின்னோட்டம் : இதனைப் பொதுவாக டி. சி. எனக் குறிப்பிடுவர்

Dc generator : (மின்.) மின்னாக்கி : பொறி விசையை மின் விசையாக்கி மின்னாற்றல் உண்டாக்கும் பொறி. இதில் உண்டாகும் மின்விசை நேர் மின்னோட்டமாகும்

Dcww : (மின்) நேர் மின்னோட்டச் செயல் மின்னழுத்தம் : இது ஒரு கொண்மியின் தனிக் குறிப்பீடு ஆகும்

D.D.T : (மருந்.) டி.டி. டி : டைகுளோரோ - டைஃபினைல் டிரைகிரோத்தோன் என்ற பூச்சி கொல்லி மருந்தின் சுருக்கப்பெயர். இதனை டைக்கோஃபோன் என்றும் அழைப்பர். இது பூச்சிகளின்