பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கிறது. மிகவும், ஆற்றல் வாய்ந்த் பூச்சி கொல்லி மருந்து

dead axle : (தானி) நிலை இருசு : சுழலாமல் நிலையாக இருக்கும் இருசு

deadbeat : (மின்.) தீரக்களைத்த : கருவிகளில் குறியீட்டு முள்கள் ஒய்வுநிலைக்கு வரும் நிலை

dead center : (எந்.மர.வே.) அடைப்பு மையம் : ஒரு கடைசல் எந்திரத்தின் வால்முனையுடன் சுழல முடியாதபடி பொருத்தப்பட்டுள்ள மையப்பகுதி

dead end : (கம்.) ஒருமுக அடைப்பு வழி : ஒரு முனை அடைக்கப்பட்டு விட்ட குழாய்

deadening : (க.க.) ஒதக்காப்பு : காப்புப் பொருட்களைப் பயன்படுத்தி தரைத்தளங்களிலும் சுவர்களிலும் ஒதக்காப்புச் செய்தல்

dead level : பாழ்மட்டம் : மேடுபள்ளமின்றி வேறுபாடற்ற நெடு மட்டநிலை

dead line :

(1) கடைசிக் கோடு : ஒரு நீள் உருளை அச்சுப்பொறியில் அச்சுப் படிவங்களை வைப்பதற்கு வழிகாட்டுவதற்காகக் குறிக்கப்பட்ட கோடு

(2) இறுதிநேரம் : செய்தியிதழ்களின் கடைசிக் கொடுக்கவேண்டிய கடைசிநேரம்

dead load : (பொறி.) நிலைச்சுமை : அழுத்தம் சீராகவும், நிலையாகவும் இருக்கும் ஒரு சுமை

dead matter : (அச்சு.) பயனற்ற செய்தி மூலம் : பயன்படுத்தப்படா திருக்கிற அல்லது பகிர்ந்தளிக்கப் படவிருக்கிற அச்செழுத்துத் தொகுதி

dead rear axle : (தானி.) நிலைப் பின்னணி இரசு : திருப்பிட முடியாத ஒரு நிலையான பின்னணி இருசு. இது இரட்டைச் சங்கிலியால் ஒடும் உந்துகளிலும், உள்முகப் பல்லிணைகளால் இயங்கும் பார உந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது

dead rise : (வானூ.) நிலையேற்றம் : ஒரு மிதவையின் அல்லது பறக்கும் படகின் உடற்பகுதியின் குறுக்குவெட்டுப் பகுதியில் இரும்பு அடிக்கட்டையின் உயரத்திலிருந்து எந்திரத்தின் உயரம் வேறுபடுகிற அளவு

dead smooth file : (எந்.) உராய்வற்ற நிலை அரம் : மிக நேர்த்தியாக வெட்டும் அரம்

dead spot : செயலற்றக் குறியிடம் : சில அலைவரிசைகளில் வானொலி அலைகளைப் பெறுவதைக் தடுக்கிற இயற்கை நிகழ்வுகள் உள்ள ஏதேனும் இடம்

dead weight : (பொறி.) பாழும்பளு : ஒர் ஊர்தி அல்லது பார ஊர்தி ஏற்றிச் செல்லும் சுமையிலிருந்து வேறுபட்ட அதன் சொந்த எடை

deal : (தச்சு.) மரப்பலகை : பலகை அல்லது பலகை இணைப்பு செய்ய பயன்படும் ஒரு மரப்பலகை அல்லது பலகைப் பாளம்

decade resistance box : (மின்.) பதின்மானத் தடைமாற்றிப் பெட்டி : இது ஒரு எளிமையான தடைப் பொறியமைவு. இதில் ஒவ்வொன்றும் பத்துக் கம்பிச் சுருள்களைக் கொண்ட இரு தொகுதிகள் அமைந்திருக்கும். ஒரு தொகுதி ஒவ்வொன்றும் ஒரு 'ஓம்' தடைத் திறனுடையது. மற்றொரு தொகுதி ஒவ்வொன்றும் '10' ஓம், தடைத் திறன் கொண்டது

decalage : சிறகத் தளக்கோணம் : இரு தளத்தின் அல்லது பன்முகத் தளத்தின் சிறகு நாண்களுக்கிடையிலான கூர்ங்கோணம்