பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

deicer : (வானூ.) பணித்தடுப்புச் சாதனம் : பனிக்கட்டிகள் விமானச் சிறகுகளில் உருவாகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் சாதனம்.

deionzation potential : (மின்.) அயனி நீக்கத் திறன் : ஒரு வாயு நிரப்பிய குழலில் அயனி நீக்கம் நிகழ்ந்து, மின்கடத்தல் நின்று போகிற மின்னழுத்த நிலை.

delaminate : (குழை.) அடுக்குப் பகுப்பு : மென் தகடுகளாக்கிய பிளாஸ்டிக் பொருளை அதன் அடுக்குகளிலிருந்து பிரித்தெடுத்தல்.

delete : நீக்கல்/நீக்கல் குறி : அச்சுப் பார்வைப் படியில் எழுத்தை அல்லது எழுத்துக்களை நீக்கி விடும்படி பிழைதிருத்துபவர் இடும் குறி.

delineate : வரைவு : உருவப்படம் எழுதுதல் அல்லது சித்திரம் வரைதல்.

deliquescence : ஈரக் கசிவு : காற்று வெளியில் ஈரம் உறிஞ்சி உப்புப் போலக் கசிவுறுதல். எடுத்துக்காட்டு; கால்சியம் குளோரைடு.

delta : டெல்ட்டா : கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வடிவுடைய (Δ) நான்காவது எழுத்து.

delta connection : (மின்.) முக்கோண இணைப்பு : கிரேக்கஎழுத்து டெல்ட்டா போன்று முக்கோண வடிவிலுள்ள சேர்முனைகளை இணைத்து அமைத்த மின் சுற்று வழிகள்.

delta metal : (உலோ.) டெல்டா உலோகம் : இது ஒர் உலோகக் கலவை. இதில் செம்பும், துத்தநாகமும், சிறிதளவு இரும்பும் கலந்திருக்கும்.

deluxe : கேர்த்திப் பதிப்பு : ஒரு நூலின் நேர்த்தியான அல்லது அலங்கார வேலைப்பாடுடைய பதிப்பு.

demagnetization : (மின்.) காந்தம் நீக்குதல் : காந்தமாக்கப்பட்ட பொருளிலிருந்து காந்தத் தன்மையை நீக்கும் முறை.

demand factor : (மின்.) கோரிக்கைக் காரணி : ஒரு மின் வழங்கீட்டு முறையில் பெரும் அளவுக் கோரிக்கைக்கும், அந்த முறையின் மொத்த இணைப்புப் பளுத்திறனுக்குமிடையிலான விகிதம்.

demarcation line : எல்லைக் கோடு : எல்லைப் பிரிவினையாகக் குறிக்கப்பட்ட வரம்பு அல்லது கோடு.

demodulation : (மின்.) அலையதிர்வு மாற்ற நீக்கம் : வானொலிப்யில் ஊர்தி அலையிலிருந்து அலையகல அதிர்வு மாற்றச் சைகைத் திறனை அகற்றிவிடும் முறை.

demodulator : (மின்.) மின்னலை உணர் கருவி : வானொலியில் மின் னலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.

demountable rim : (தானி.) இறக்கிடும் சக்கர வளையம் : டயரிலிருந்து காற்றை வெளியேற்றாமல் அப்புறப்படுத்தத்தக்க சக்கர வளையம்.

demurrage : சுணக்கக் கட்டணம் : கப்பலிலோ புகை வண்டியிலோ லாரியிலோ சரக்கேற்றத்தில் அல்லது இறக்கத்தில் ஏற்படும் காலத் தாழ்வுக்குரிய கட்டண விகிதம்.

demy : அச்சுத்தாள் :(1)38 செ.மீ. -க்கு 51 செ.மீ.அளவுடைய படம் வரையும் தாள். (2) 41 செ.மீ.க்கு 53 செமீ அளவுடைய அச்சுத்தாள். இவ்வகைத்தாள் இப்போது இந்தியாவில் பயன் படுத்தப்படவில்லை.

denaturants : (வேதி.) இயல்பு மாற்றுப் பொருள் : பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக்