பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
215

கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள். மதுபானங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ககாலின் இயல்பை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் பைரிடின், பென்சீன், மண்ணெண்ணெய் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

denatured alcohol : இயல்பு திரிந்த ஆல்ககால் : தொழில்களில் பயன்படுத்துவதற்காக பைரிடின், மெத்தைல் ஆல்ககால் போன்ற இயல்பு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தி இயல்பு மாற்றப்பட்ட ஆல்ககால்,உறையாத கரைசல்கள் தயாரிக்க இது பயன்படுகிறது.

denim : வண்ணச் சாய்வரித் துணி : முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை. இது திரைகளுக்கும் அறைகலன் அலங்காரத் துணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

dengue : (நோயி.) “டெங்கு’ காய்ச்சல்:

தலைவலியும், கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியம் உண்டாக்கும் கொள்ளைக் காய்ச்சல் டெங்கு வகை. இந்நோய் காய்ச்சல் ஒவ்வொரு முறை கொசு தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. ஒருவகைக் கொசுவினால் இது பரவுகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச்சலையும் உண்டாக்குகிறது.

density : அடர்த்தி : நெருக்கம், செறிமானம். பரும அளவுடன் எடைமானத்திற்குள்ள விகிதம்.

density altitude : (வானூ.) அடர்த்தி உயரம் : ஒரு தர அளவு வாயு அழுத்தத்தில் குறிப்பிட்ட அடர்த்திக்கு நேரிணையான குத்துயரம்.

density, gasoline : (தானி.) கேசோலின் அடர்த்தி : 60(F) ஃபா. வெப்ப நிலையில் கன அளவு கேசோலின் எடைக்கும் 39' (F) ஃபா. வெப்பநிலையில் அதே கன அளவு கேசோலின் எடைக்கு மிடையிலான விகிதம் அல்லது வீத எடைமானம்.

dentil : (க.க.) செவ்வகப் பாளம் :

தூண் முகட்டு மேல்தட்டின் சூழ் வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம்.

dentine : (உள.) பல் திசு : பற்களில் உண்டாக்கப்பட்டிருக்கும் எலும்பு போன்ற பல் திசு.

depolarization : (மின்.) முனைப்பாடு அகற்றுதல் : ஒரு மின்னழுத்த மின் கலத்தின் மின்காந்த முனைப்பியக்கம் அகல்வதைத் தடுத்து அதன் வினைத் திறனைப் பாதுகாக்கும் செய்முறை.

depolarizer : (மின்.) முனைப்பாடு அகற்றி : அடிப்படை மின்கலத்தில் துத்தநாகத்தினால் அமிலம் பகுத்துச் சிதைவதால் உண்டாகும் ஹைட்ரஜனை நிலைப் படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிகரணப் பொருள்.

deposit : (தானி.) படிவுப் பொருள் : (1) பணி முடித்த மேற்பரப்புகளில் படியும் உள்ளெரிபொருள். (2) பல்வேறு தகடாக்கும் செய் முறைகளின் போது ஒர் உலோகத்தின் முகப்பில் திரளும் திடப்பொருள். கொதிகலன் முதலியவற்