பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

றில் திரளும் கருகிய பொருளையும் குறிக்கும்

depression : (இயற்).) கற்றழுத்தத் தாழ்வு : வாயு மண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வாக இருக்கும் பகுதி, பூமியின் வடபகுதி காற்றழுத்தத் தாழ்வு ஏற்படும்போது, காற்று ஒரு வட்டத்தில் சுழல்கிறது. காற்றழுத்தத் தாழ்வு காரணமாக மோசமான பருவ நிலை உண்டாகும்

depression : (உள.) மனச்சோர்வு : நம்பிக்கையிழந்து, சோகம் குடி கொண்டு சோர்வு உண்டாகும். உணர்வு மிகுந்த மனக்கிளர்ச்சிக்கும் ஓர் முழு விரக்திக்குமிடையிலான பல்வேறு மனமாறுதல்களை உண்டாக்கும் மனக்கோளாறு

deposit : (தானி.) படிவு :

(1) சுண்ணக் கரியகை படிந்த மேற்பரப்புகளில் படியும் உள்ளெரி பொருள்

(2) முலாமிடும் செய்முறையில் உலோக மேற்பரப்பில் படியும் திடப்பொருள்

deposition : படியவிடல் : படிய விடுதல் அல்லது ஒரு பரப்பின் மீதும் ஒரு படலம் படியச்செய்தல்

depreciation : தேய்மானம் : காலக் கழிவினாலும், தேய்மானத்தினாலும் எந்திரங்களின் மதிப்பில் ஏற்படும் குறைவு

depth gauge : (எந்.) ஆழ அளவி : துவாரங்களின் ஆழத்தையும் உள்ளிடப் பகுதிகளின் ஆழத்தையும் உலோக மற்றும் மரவேலை நிபுணர்கள் பயன்படுத்தும் அளவி


depth micrometer : (எந்.) ஆழ நுண்ணளவை மானி : நுண்பொருள்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றை அளந்து காட்டும் கருவி

derrick : (பட். வே.) பாரந்துக்கும் பொறி : பளு நகர்த்துவத்ற்கும், ஏற்றி, இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு

descaling : (உலோ.) செதிள் நீக்கம் : உலோகங்கள் மிக உயர்ந்த வெப்ப நிலைகளில் ஆக்சிகரணமாகும் சூழல்களுக்கு உள்ளாகும் போது உலோகங்களில் படியும் செதில்களை நீக்குதல்

descender : (அச்சு.) கீழ்நோக்கிய எழுத்து : அச்சுத் துறையில் நெடுங் கணக்கின் சிற்றெழுத்து வடிவுகளில், எழுத்தின் உடலிலிருந்து கீழ்நோக்கி செல்கின்ற p,y.j போன்ற எழுத்துக்கள்

describe : வரை : வரைந்து காட்டு; வரை வடிவம் கொடு; விரித்துரை, குறித்துரை

description : வருணனை : பொருள் எதனையும் சொல்லால் அல்லது எழுத்தால் விரித்துரைத்தல்

desiccate : உலர்த்து : ஈரம் நீங்க உலர்த்துதல்; உலர்பதனஞ் செய்தல்; காய்ந்து போகச் செய்தல்

desiccant : (குளிர்.பத.) உலர்த்து பொருள் : ஈரப்பதனை அகற்றி உலர்த்துவதற்குப் பயன்படும் துணைப் பொருள்

design : வடிவமைப்பு : கட்டிடம் கட்டுவதற்கு அல்லது எந்திரம் தயாரிப்பதற்கு முன்மாதிரியாக வகுக்கப்படும் உருவரைப்படம். எந்திரவியலில் எந்திர இயக்க முறைகளை உருவரைப்படமாகத் தீட்டுதல்