பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
219

வட்ட வடிவமான அல்லது நீள்வட்ட வடிவமுடைய ஒரு முனைப்புத் தகடு.

dial bridge : (மின்.) முகப்புடை இணைப்பு : சுருள் கம்பிகள் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தடை இணைப்பு. இதில் செருகிகளை நுழைப்பதற்குப் பதிலாக இரு நகரும் புயத்தின் மூலமாகத் தொடர்புகள் ஏற்படுத்த்ப்படுகின்றன.

dial gauge : முகப்புடை அளவி : இது ஒரு வளைந்து விற்சுருளினால் இயக்கப்படும் குறியீட்டு முள் கொண்ட ஒரு வட்டமுகப்பு ஆகும். இது அழுத்தத்தின் அளவை அல்லது வெற்றிடத்தின் அளவைக் குறித்துக் காட்டுகிறது. இந்த அளவிகள் அனைத்தும் போர்டான் விற்சுருள் தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன.

dialysis : கலவைப் பிரிப்பு : கரைந்த பொருளிலிருந்து இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து கூழ்ப் பொருள்களைப் பிரித்தல்.

diamagnetic : (மின்.) குறுக்குக் காந்த விசை : காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்குமேற்குத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல்.

diameter : விட்டம் : வட்டத்தின் குறுக்களவு. ஒரு வட்டத்தின் மையப் புள்ளி வழியாகச் சென்று வட்டத்தின் பரிதியில் முனைகள் முடியும் ஒரு நேர்கோடு விட்டம் ஆகும். கணிதத்தில், விட்டம்= பரிதி x 0.3183.

diametral pitch : (பல்லி.) விட்ட இடைத் தொலையளவு : ஒரு பல்லிணையில் பற்களின் எண்ணிக்கைக்கும், அதன் இடைத்தொலையளவு விட்டத்திற்கு மிடையிலான தொடர்பளவு அல்லது விகிதம். 40 பற்களைக் கொண்ட ஒரு பல்லிணையில் இடைத்தொலையளவு விட்டம் 10 என்றர்ல், விட்ட இடைத் தொலையளவு 4 ஆகும்.

diamond : (வேதி.) வைரம் : கார்பனின் படிக வடிவம். கனிப் பொருள்களிலேயே மிகவும் உறுதி வாய்ந்தது. ஆங்கில அச்செழுத்தில் 4 1/2 புள்ளிக் குறிப் பருமனுள்ள சிறு எழுத்து வகை.

diamond-point chisel : (எந்.) வைரமுனைச் சிற்றுளி : இது கொண்டைச் சிற்றுளி போன்றதேயாகும். இதில் வெட்டுமுனை வைரவடிவில் அமைந்திருக்கும். இது கூரிய அடிப்பக்கமுடைய வரிப்பள்ளங்களை வெட்டுவதற்கு ஏற்றது.

diamond point tool : (மர.வே.) வைர முனைக் கருவி : இரு வெட்டு முனைகள் கொண்ட ஒரு கருவி; இந்த முனைகள் ஒன்றுக்கொன்று சாய்வாக அமைந்து ஒரு கூர்ங் கோணத்தில் சந்திக்கும். இக்கருவியின் ஒருமுகப்பு தட்டையாகவும். இன்னொரு முனை சாய் கோணத்திலும் இருக்கும்.

diamond wheel dresser : (பட்.) வைரச் சக்கர செதுக்குளி : அரைப்புச் சக்கரத்தை இயைவுறுத்துவதற்குப் பயன்படும் தொழில் வைரம்.

diaper : சித்திர வேலைப்பாடு : கலை வேலைப்பாடுகளிலும் கட்டிடக் கலையிலும் மேற்பரப்பினை அழகுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வடிவகணித வடிவமைப்புகளுடைய சித்திரச் சிற்ப வேலைப்பாடு.

diaper work : செதுக்குக் சித்திர வேலை : அறைகலன்களில் செய்யப்படும் செதுக்குச் சித்திரச் சிற்ப வேலைப்பாடு.