பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

ஆங்கில அச்செழுத்தில் 4 1/2 புள்ளிக் குறிப் பருமனுள்ள சிறு எழுத்து வகையுடைய உலோகத் தகடு. இது ஒளிப்படக் கருவியில் பயன்படுத்தப்படுகிறது

diathermy : (மின்.) உள் வெப்ப மூட்டுதல் : மின்னோட்ட இயக்கத்தினால் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல்

die : (உலோ.) வார்ப்புருப் படிவம் : உலோகங்களை வடிவமைக்கவும், வார்க்கவும், முத்திரையிடவும் வெட்டவும் பயன்படும் கருவி

die casting : (எந்) அச்சு வார்ப்பு : உருகிய உலோகத்தை அல்லது உலோகக் கலவையை அழுத்த நிலையில் ஒரு வார்ப்பினுள் ஊற்றித் தயாரிக்கப்பட்ட மிகத் துல்லியமானதும் வழவழப்புடையதுமான ஒரு வார்ப்பு

die-casting metal : (உலோ.) அச்சு வார்ப்பு உலோகம் : அச்சு வார்ப்பு தயாரிப்பதற்குப் பயன்படும் உலோகக் கலவை. இதில் அலுமினியம், ஈயம், துத்தநாகம், செம்பு போன்ற உலோகங்களில் ஏதேனும் ஒன்று ஆதாரமாக அமைந்திருக்கும். உந்து வண்டிகளுக்கான கருவிகளுக்கு 90% நிக்கலும் 2% சிலிக்கனும் கலந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது

die-chaser : (எந்.) அச்சு வார்ப்புப் பொதி தகடு : ஒரு திருகு வெட்டு அச்சு வார்ப்பிலுள்ள பொதி தகடு

die clearance : அச்சு வார்ப்பு இடைவெளி : வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய உலோகத்தின் கனத்திற்கு இடமளிப்பதற்காக வார்ப்புருவத் தாய்ப் படிவ அழுத்தும் பொறிக்கும் அச்சு வார்ப்புக்குமிடையிலுள்ள இடைவெளி

die forging : அடித்துருவாக்குதல் : அச்சு வார்ப்புக்ளில் உலோகங்களை உருக்கிக் காய்ச்சி அடித்து உருவாக்குதல், குறைந்த செலவில் தரமான வேலைப்பாடுகளுக்கு இது உதவுகிறது

diehead : (எந்.) அச்சு வார்ப்புத் தலை : ஒரு திருகு வெட்டு எந்திரத்தில் இழைகளைத் தாங்கியுள்ள சாதனம்

dielectric : (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் : மின்விசையைக் கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற பொருள்

dielectric constant (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் நிலையெண் : ஒரு விசையின் நிலைமின்னியல் தொடருக்கான மின்னழுத்தத் தாங்கு பொருளின் கடத்தும் ஆற்றலுக்கும் காற்றழுத்தத்திற்கு மிடையிலான விகிதம்

dielectric strength : (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் வலிமை : இரு மின்வாய்களுக்கிடையில் ஒரு பொருளை வைக்கும் போது உண்டாகும் மின்னழுத்த அளவுக்கும் அதன் மின்ன்னுாட்ட அளவு வேறுபாட்டுக்குமிடையிலான மின்னழுத்த மாறுபாட்டளவு

diesel engine : டீசல் பொறி : வெப்பமூட்டிய அழுத்த மிக்க காற்றில் எண்ணெய்க் காற்று கலந்து செலுத்தப்பெற்று எரியூட்டப் பெறும் பொறிவகை. இதனை டாக்டர் ஆர். டீசல் என்பார் கண்டுபிடித்தார். அவர் பெயரிலேயே இப்பொறி அழைக்கப்படுகிறது

die stamping : (உலோ.வே.) அச்சு வார்ப்பு முத்திரை : (1) ஒர்