பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
223

என்பதை ஒரு வரைபடத்தில் காட்டும் கோடு

dimension shingles : (க.க.) பரிமாண மரப்பாவோடு : ஒரு சீரான வடிவுள்ள மரப்பாவோடுகளிலிருந்து வேறுபட்டது

dimmer : (தானி.) ஒளி குறைப்பான்: உந்து வண்டிகளின் வெளிச்சமிக்க முகப்பு விளக்குகளில் கண் கூச வைக்கும் ஒளியைக் குறைப்பதற்கான ஒரு சாதனம். இது காலடியிலுள்ள விசையின் மூலம் முகப்பு ஒளிக்கற்றையினை உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் செய்யப்படுகிறது

மின்னியலில் மின் விளக்கின் ஒளியைக் கட்டுப்படுத்துவதற்காக வரிசையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தடைமாற்றி

dimming resistor : (மின்.) மங்கு தடுப்பான்: முகப்பு விளக்குகளில் ஒளியின் செறிவினைக் குறைப்பதற்காக விளக்கின் சுற்றுவழியில் செருகப்பட்டுள்ள ஒரு சாதனம்

dimpling : குழிகுடைதல் : ஒரு குடையாணி தலை பொருந்தும் வகையில் ஒரு மெல்லிய உலோகத்தில் ஒரு குழி உண்டாக்கும் முறை

dinging hammer : ( உலோ. ) நெளிவெடுக்கும் சுத்தி : உலோகத் தகட்டிலுள்ள பள்ளங்களையும், நெளிவுகளையும் அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கை நெளிவெடுக்கும் சுத்தியல்

dinking die : (பட்.) துளையிடு கருவி : துணி, தோல், காகிதம் முதலியவற்றில் துவாரமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய துளையிடுங்கருவி அல்லது தமரூசி. இதனை ஓர் எந்திரத்திலோ, சுத்தியால் அடித்துக் கைத்தமருசியினாலோ இயக்கலாம்

diode: இரு முனையம்: ஒரு வெற்றிடக் குழாய் இரு மின் முனையங்கள் கொண்ட மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங்கருவி

diode detector (மின்.) இருமுனையக் கண்டறி கருவி : இரு முனையத்தின் ஒரு முகக் கடத்துந்தன்மையைப் பயன்படுத்தும் கண்டறி மின் சுற்றுவழி

dip : (மின்.) காந்த ஊசி இறக்கம்: அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் கீழ்நோக்கிய இறக்கக்கோணம்

dipangle இறக்கக்கோணம் : மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கக் கோணம்

dip brazing: (பற்.) தோய்வுப் பற்ற வைப்பு : இரு பகுதிகளைப் பற்ற வைப்பதற்கு, இருபகுதிகளையும் ஒன்றாக இணையும் வரையில் போதிய அளவு சூடாக்கி உருக்கிய துத்தநாக்த்தில் தோய்த்து வைககும் முறை

diphthorg: இணையுயிர் : ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள். Phoenix என்னும் சொல்லில் "oe" என்பது ஒரே உயிரொலியுடைய ஈரெழுத்து இணையுயிர் ஆகும்

dipole antenna : இரு கம்ப விண்ணி: ஒரே நேர்கோட்டில் சமநீளமுள்ள இரு மின்கடத்திகளைக் கொண்ட விண்ணி. இது உள் முனைகளில் இணைக்கப்பட்டுள்ள இரு ஈயக்கம்பிகளைக் கொண்டிருக்கும்.இது ஈரினை அல்லது இரு கம்ப விண்ணி என்றும் அழைக்கப்படும். சிற்றலைகளுக்கு தானே தாங்கிக் கொள்ளும் உலோகச் சலாகைகள் அல்லது குழாய்கள பயன்படுத்தப்படுகின்றன