பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

direct action : (மின்.) நேரடி இயக்கம் : எந்திரவியல் இயக்கத்தில் இடையீட்டுப் பொருள் இல்லாமல் நேரடியான இயக்கம்

direct current : (மின்.) நேர் மின்னோட்டம் : ஒரு திசைப் போக்குடைய மின்னோட்டம். ஒரு மின்னாக்கப் பொறியில் உற்பத்தியாகும் மின்னோட்டம் மாறுமின்னோட்டமாக அமைகிறது. ஆயினும், அதனைத் திசைமாற்றியின் உதவியால் நேர் மின்னோட்டமாக மாற்றலாம்

direct current arc welding : நேர்மின்னோட்டச் சுடர் பற்றவைப்பு: சுடரில் உண்டாகும் மின்விசை நேர் மின்னோட்டமாக இருக்கும் வகையில் செய்யப்படும் ஒரு சுடர் பற்றவைப்பு முறை

direct drive : நேரடி இயக்கி : சுழல் தண்டுகளையும் வார்ப்பட்டைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முதன்மை இயக்கியுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் ஒரு மின்னாக்கப் பொறியினை இயக்கும் அமைவு

direct dyes : நேரடி சாயங்கள் : நிறம் கெட்டியாக்கும் பொருள் எதனையும் பயன்படுத்தாமலேயே கெட்டியாக உள்ள சாயங்கள்

direct indexing : (எந்.) நேர்பகுப்பு : துளையிடு எந்திரத்தில் இந்த நேர்பகுப்பு செய்யப்படுகிறது. கதிரும் அதில் ஏற்றப்பட்டுள்ள வேலைப்பாட்டுக்குரிய பொருளும் பகு தகட்டுடன் ஒத்த கோணங்களில் சுழல்வதன் மூலம் இவ்வாறு செய்யப்படுகிறது

direction : திசை :ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை உள்ள நிலை

directional . gyro (வானு.) திசை காட்டும் சுழலாழி : திசையினைக் காட்டக்கூடிய ஒரு சுழலாழிக் கருவி. இதில் சுழல் பொருள்களின் இய்க்க விளக்கும் ஒரு தங்கு தடையற்ற சுழலாழிக் கருவியும் அமைந்திருக்கும். இது வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு நிலையிலே இருக்கும். இதன் கோணம் பிறழ்வினைக் காட்டுகிறது

directional radio : திசைநோக்கு வானொலி : விண்ணியிலிருந்து வானொலி ஆற்றலை முன்னரே நிர்ணயிக்கப்ப்ட்ட ஒரு குறிப்பிட்ட திசையில் அனுப்பும் வானொலி ஒலிபரப்பு

directional stability : (வானு.) திசை நோக்கிய உறுதிப்பாடு : வழக்கமான அச்சில் சுழலும் உறுதிப்பாடு, ஒரு விமானம் இத்தகைய உறுதிப்பாட்டினை பக்கம் நோக்கிய நிலையில் எளிய வடிவில் உடையதாகும்

direction of force : (இயற்.) விசையின் திசை : ஒரு பொருளின் மீது செயற்படும் விசை நகர்ந்து செல்லும் அல்லது நகர்ந்து செல்ல முனையும் திசை

direction of magnetic flux : (மின்.) காந்தப் பெருக்கத் திசை : ஒரு காந்தப்புலத்தில் இந்தத் திசை எப்போதும் வடக்கிலிருந்து தென் துருவத்தை நோக்கியதாக இருக்கும்

direction signal (தானி.) திசைச் சைகை : உந்துவண்டிகள் திரும்பவிருக்கும் திசையினை ஒட்டுநர் குறித்துக் காட்ட உதவும் ஒரு மின் விசைச் சாதனம்

direct rediation : (இயற்.) நேரடிக் கதிர்வீச்சு : ஒர் அறையை நீராவியால் அல்ல்து அறையிலுள்ள வென்னீர்க்கதிர்வீசிகளால் சூடாக்கும் முறை நேரடிக் கதிர் வீச்சு எனப்படும்