பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

disk ruling machine : ( அச்சு. ) வட்டத்தகட்டுக் கோடுவரை கருவி: எஃகுப் பேனாக்களுக்குப் பதிலாக வட்டத்தகடுகள் கொண்டு கோடுகள் வரையும் ஒரு பொறியமைவு

disk wheel ; (தானி.) வட்டத்தகட்டுச் சக்கரம் : இது எஃகுப் பொறிப்பீடுகளாகச் செய்யப்பட்டிருக்கும். சிலவற்றில் பிரித்தெடுக்கக்கூடிய வெளிவளையங்கள் இருக்கும். மற்றவற்றில் சக்கரமும் வெளிவளையமும் ஒரே அலகாக அமைந்திருக்கும். டயரை மாற்றும் போது சக்கரத்தையும் மாற்றி விடுவது வழக்கம்

dismantle : உறுப்புகளைக் கழற்றுதல்: துணையுறுப்புகளைப் பிரித்தெடுத்தல்; பூட்டுப் பொருத்துக் கழற்றி

dispersion : (குழை.) சவ்வூடுசெல்லாக் கரைசல் நிலை: பிளாஸ்டிக்கில் சீரான பரப்பீடாகவுள்ள மற்றொரு நேர்த்தியான பொருளின் மிதவல். இது பிசின் துகள் ஊடே கிடக்கும் பால்மம் போன்றது

displacement current : (மின்.) பெயர்ச்சி மின்னோட்டம் : மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு பொருளில் எலெக்ட்ரான்களின் பெயர்ச்சி நேர் மின்னேற்றத்தை நோக்கி நடைபெறுதல்

display : (தானி.) காட்சி : எண் வட்டுகள், வரைபடங்கள், எண் மானக் குறியீடுகள் மூலமாக எந்திர இயக்கு பொறியில் காட்சியாகக் கிடைக்கும் தகவல்கள்

display type: (அச்சு.) அலங்கார அச்செழுத்து : அச்சிடப்படும் சில வாசகங்களை முனைப்பாகக் காட்டக்கூடிய அச்செழுத்து வகை

dissect : அறுவைப் பகுப்பாய்வு : தாவரத்தின் அல்லது விலங்கின் உடல் உறுப்புகளைக் கூறுகளாக அறுத்துப் பகுப்பாய்வு செய்தல்

dissipate : சிதறடி நச்சு: வாயுக்களைச் செலவழிப்பதற்காகச் சிதறடித்தல், கலைத்தல் அல்லது குலைததல

dissipation of energy : (எந்.) ஆற்றல் அழிவு : சக்தியைப் படிப்படியாக இழத்தல்

dissociation: (வேதி.) சேர்மானச் சிதைவு : வெப்பத்தின் மூலமாக வேதியியல் வினையை எதிர் மாறாக்குதல். எடுத்துக்காட்டாக அம்மோனியம் குளோரைடைச் சூடாக்கும்போது, அது ஹைட்ரஜன் குளோரைடாகவும் அம்மோனியாவாகவும் சிதைந்து, அந்தக் கூட்டுப் பொருட்கள் ஒருங்கினைந்து அம்மோனியம் குளோரைடு உண்டாகிறது

dissolve : கரையச்செய் : ஒரு பொருளுடன் வேறொரு பொருளைச் சேர்த்து, அதனைத் திட நிலையிலிருந்து திரவ நிலையடையச் செய்தல் தொலைக்காட்சியில் ஒலியை அல்லது படத்தைத் தேய்ந்து மறையச் செய்தல்

distemper :பற்றொவியம் : உட்சுவர்களில் சுண்ண்ப் பரப்பின் மீதும் நீற்றுப் பரப்பின் மீதும் முட்டைக் கருவுடன் கஞ்சிப்பசை கலந்து தீட்டப்படும் வண்ண ஒவியமுறை

distend : விரிவாக்கு: விரிவாக்குதல்; நீட்டுதல்; பரப்பி விரிவுறச் செய்தல்

distillation : (வேதி.) வாலை வடித்தல் : சூடேறி ஆவியாகும் இயல்புடைய_கலவைத் கூற்றினை ஆவியாகப் போகவிடுதல். இதன் மூலம் அதிக அளவில் ஆவியாகும் பொருளைக் குறைந்த அளவில்