228
அளவிடுவதற்குப் பயன்படும் கவைமுள் கருவி
dividing head, (எந்.) பகுப்புச் சாதனம் : ஒரு பொருளின் சுற்றளவை சரிசமமான பாகங்களாகப் பகுப்பதற்குப் பயன்படும் ஒர் எந்திர சாதனம்
divisor (கணி.) வகுக்கும் எண்: வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்கும் எண்
D layər : “D” அடுக்கு :பூமியின் மேற்பரப்பிலிருந்து 30-40 கி.மீ. உயரத்தில் உள்ள குறைந்த அயனியாக்கம் உடைய வாயுமண்டல அடுக்கு
doctor (பட்.) சீர்படுத்து கருவி : எந்திரக் கருவிகளைச் சீர்படுத்து வதற்கான கருவி. செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை
dodger : (அச்சு.) துண்டு வெளியீடு : வீட்டுக்கு வீடு வழங்குவதற்குரிய சிறிய அச்சிட்ட சுற்றறிக்கை அல்லது துண்டு வெளியீடு
doeskin : மான் தோல் : பக்குவப் படுத்தப்பட்ட பெண் மானின் தோல்
dog : (எந்.) வளையிருப்பாணி : வெட்டு மரங்களை இணைத்துப் பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி
dogtooth: (க.க.) சித்திர வேலை: சதுரமோட்டுருவ நுட்ப வேலைப்பாடுள்ள நார்மன் கட்டிடக் கலையைச் சார்ந்த சித்திர வேலைப்பாடு
dolly_: (எந். திருகுப்பிடி : திருகுப் பிடிக்கருவி
dolomite: (கணி.) டோலோமைட்: சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை, இதில் மக்னீசியம் அதிக அளவில் அடங்கியிருக்கும். எஃகுத் தொழிலில் இது பயன்படுகிறது
domain theory : (மின்.)ஆள்வரைக் கோட்பாடு : காந்த விசை தொடர்பான ஒரு கோட்பாடு. கோள் நிலை எலக்ட்ரான்களின் இயக்கத்தினால் மையக் கருவைச் சுற்றி உண்டாகும் அணுவியல் காந்தங்கள், ஒருங்கிணைந்து குழுமங்களாக உருவாகும் வலுவான போக்கு உடையவை என்ற் அனுமானத்தின் அ டிப்படையில் அமைந்தது இந்தக் கோட்பாடு. இந்தக் குழுமங்கள் "ஆள்வரைகள்' எனப்படும்
dome : (க.க.) கவிகை மாடம் , கவிதை மாடத் தூபி
domed : (குழை.) கவிகை வடிவான : பிளாஸ்டிக் பொருளின் தட்டையான பகுதியை கவிகையுருவுடையதாகவும் தோன்றச் செய்யும் ஒரு சீரான உருத்திரிபு
domestic architecture : (க.க.) குடியிருப்புக் கட்டிடக்கலை : வீடுகள், தனியார் கட்டிடங்கள் தொடர்பான வடிவமைப்பு திட்டமிடுதல், கட்டுமானம் பற்றிய கலை
dominant colour : (விண்.) முனைப்பு வண்ணம் : முனைப்பாக விஞ்சி நிற்கும் வண்ணம்
dongola ; டோங்கோலா : கனிமப் பொருட்களையும் தாவரப் பொருட்களையும் பயன்படுத்திப் பக்குவம் செய்து ஒரு சிறுமரத் தொட்டி போன்ற வடிவில் அமைக்கப்பட்ட கன்றின் தோல், வெள்ளாட்டின் தோல் அல்லது செம்மறியாட்டின் தோல்
donkey : உள் இழைப்பு எந்திரம்: