பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
229

உள் இழைப்பு வேலை செய்வதற்கான ஒர் எந்திரம்

donkey engine : (பொறி.) பாரம் இழுப்பு எந்திரம் : கப்பலின் மேல் தட்டில் பாரம் இழுப்பதற்கும் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் நீராவி எந்திரம்

doorbell: (மின்.) வாயில்மணி : வெளிப்புறம் கைப்பிடி அல்லது விசைக் குமிழின் மூலம் வீட்டிற்குள் அடிக்கக்கூடிய மணி

door check: (க.க.) கதவுத்தடை : கதவு வேகமாகச் சார்த்திக் கொள்வதைத் தடுத்து மெதுவாகச் சார்த்திக் கொள்ளுமாறு செய்யும் அமைவு

door frame: (க,க.) கதவு நிலை.: கதவினைத் திறக்கவும் மூடவும் அதனைச் சுற்றி அமைந்துள்ள நிலை

door head:(க,க.) கதவு நிலை மேல் முகடு: கதவு நிலையின் மேற்பகுதி

dope: (கம்.) வண்ண மெருகு: புரியிழையுடைய குழாய் இணைப்புகளுக்கு மசகிடுவதற்குப் பயன்படும் ஒரு கூட்டுப் பொருள்

dope: (வானூ.) விமான வண்ண மெருகு: விமானப் பூச்சுக்குரிய ஒரு திரவப் பொருள்

doppler (விண்.)டோப்ளர், கிறிஸ்டியன் (1803-1853); ஆஸ்திரிய இயற்பியலறிஞர்

doppler effect: (இயற்.) டோப்ளர் விளைவு : ஒலி, ஒளி, ராடார் போன்றவற்றின் அலை அதிர்வில் ஏற்படும் மாற்றம். ஆதாரமும், நோக்குபவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி நகரும்போது இந்த மாற்றம் ஏற்படுகிறது. நோக்குபவரை ஆதாரம் நெருங்கி வரும்போது இந்த அலை அதிர்வு அதிகமாகிறது; விலகிச் செல்லுங்கால் குறைகிறது. இந்தத் தத்துவம். தடம் பற்றிச் செல்வதிலும், மீகா மத்திலும் பயன்படுகிறது

doric frieze: (க.க.) கிரேக்க ஒப்பனைப் பட்டை : கட்டிடத்தில் தூணுக்கு மேலுள்ள தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம்

doric order:(க.க.) கிரேக்க கட்டிடபாணி: பண்டைய கிரேக்கக் கட்டிடக்கலைப்பாணி

dormer window: (க.க.) பல கணி: சாய் கூரையில் செங்குத்தாக உந்திக் கொண்டிருக்கும் பலகணி

dormitory: (க.க.) துயிற்கூடம் : பல படுக்கைகள் கொண்ட பெரிய துயிற்கூடம். உறங்குவதற்குரிய ஒரு தனிக் கட்டிடத்தையும் குறிக்கும்

dosimeter: (இயற்.) கதிரியக்க அளவுமானி: ஒருவர் பெற்றுள்ள கதிரியக்கத்தின் அளவினை அளவிடுவதற்கான ஒரு கருவி

dote: (மர.) இற்றுப்போதல்: பார்க்க: மட்குறு

dot generator :(மின்.) வெண் புள்ளியாக்கி : தொலைக்காட்சித் திசையில் வரிசையான வெண் புள்ளிகளை உண்டாக்கும் ஒரு தொலைக்காட்சி பழுது பார்க்கும் கருவி. வண்ணத் தொலைக்காட்சியில் குவியத்தைச் சரிசெய்வதற்கு இது பயன்படுகிறது

dot-sequential system : (மின்.) புள்ளித் தொடர் விளைவு முறை : தொலைக்காட்சிப் பட ஒளி-ஒலிக் கூறுகளை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகத் தனித்தனியாகப் பிரித்தெடுத்துத் தொலைக்கனுப்பும் முறை