பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது

dovetail halved joint: (மர.வே. ) அரைப் பொருத்திணைப்பு : இந்த அரைப் பொருத்திணைப்பில் இரு வெட்டுவாய்களும் புறாவின் வால் போன்று பாதத்தில் குறுகியிருக்கும்

dovetailing: பொருத்திணைத்தல்: (1) பொருத்திணைப்புகள் மூலம் இறுக்கிப் பிணைத்தல் (2) அச்சுக் கலையில் ஈய அச்சு வரிக்கட்டைகளை இரட்டிப்பாக்குதல், இதில் பிளவு இணைப்புகள் ஒன்றின் மேல் ஒன்று பொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்கும்

dovetail saw: (மர.வே.) பொருத்திணைப்பு ரம்பம் : இது தடித்த புறமுடைய ரம்பம் போன்றது; ஆனால் அதைவிடச் சிறியது. இதில் பற்களும் நுண்ணியதாக இருக்கும். கைப்பிடியும் வேறு வடிவில் அமைந்திருக்கும்


dowel இணைப்பாணி : மரத் துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்துவதற்கான மரம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத ஆணி

doweling : இணைப்பாணி இணைப்பு : இணைப்பாணிகளின் உதவியினால் இணைப்புகளை ஏற்படுத்துதல்

dowel pin : (மர.வே.) இணைப்பூசி: உள்ளீடற்ற பெட்டியின் இரு பகுதிகளை இணைப்பதற்கு அல்லது கெட்டிப்படுத்தும்போது தோரணியின் பகுதிகளை இணைப்பதற்குப் பயன்படும் அல்லது உலோகத்தாலான ஊசி

dowel screw : இணைப்பாணித் திருகு : இருமுனைகளில் திருகிழை அமைக்கப்பட்ட மரத்தாலான திருகு

downdraft carpuretor. (தானி.. ) கீழ்வழி எரி-வளி கலப்பி : காற்று மேற்பகுதி வழியே உட்புகுந்து கீழ் நோக்கிச்சென்று தெளிப்பான் நுனியை அடையும் அமைப்புடைய ஒர் எரி-வளி கலப்பி

down spout: ( க.க.) கீழ்நோக்கிய கெண்டி வாய்க்குழாய் : கூரையிலிருந்து தரைக்கு அல்லது சாக்கடைக் குழாய்க்கு மழை நீரைக் கொண்டு செல்வதற்கான ஒரு குழாய் அல்லது குழாய்க் கால்வாய்

downwash : (வானு.) கோட்டக்கோணம்: விமானத்தை உயர்த்தும் மேற்பரப்புகள் காற்றோட்டத்திலிருந்து கோட்டமுறும் கோணம்

drachm : திராம் : மருந்துத் திரவங்களை அளவிடப் பயன்படும் 'அவுன்ஸ்' என்னும் எடுத்தலளவை வீசக்கூறு.

draft : (வார்.) வாரிழைப் பட்டை: ஒரு தோரணியை மண்லிலிருந்து எளிதாக அகற்றுவதற்கு உதவுகிற அத்தோரணியிலுள்ள வாரிழைப் பட்டை

drafting : வரைதல் : முன் வடிவ வரையும் கலை

draftsmans : உரு வரைப்படங்களை வரைபவர்

draftsmans’ scale : வரைவாளர் அளவுக்கோல் : உருவரைப்படங்களை வரைபவர்கள் பயன்படுத்தும் முக்கோண வடிவ அல்லது தட்டையான அளவுகோல். இதன் ஒரு விளிம்பு 1¼,⅛, ¾, ½ முதலிய அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இன்னொரு விளிம்பு பின்ன