பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

draw cut shaper : (எந்.) இழுவை வெட்டு வடிவாக்கி: தட்டுதல் மூலம் அல்லாமல் இழுத்தல் மூலம் வடிவுகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

drawing back: (உலோ..) மறு சூடாக்கம் : எஃகின் கடினத் தன்மையை மாற்றுவதற்காக, எஃகு கெட்டியான பின்பு, முட்டுபதன் வெப்ப நிலைக்குக் குன்றத்த ஒரு வெப்ப நிலைக்குக் மீண்டும் சூடாக்குதல்

drawing board : படம் வரை சட்டம் : படம் வரைவதற்குத் தாளைப் பரப்பிக் குத்திவைப்பதற்கான பலகைச் சட்டம். இது வெண்தேவதாரு, எலுமிச்சை. நெட்டிலிங்கம் ஆகிய மரங்களிலிருந்து செய்யப்படுகிறது

drawing die : (உலோ.வே, ) வரை படிவ அச்சு : உலோகத் தகட்டினை கிண்ண வடிவுகளில் அழுத்தித் தயாரிப்பதற்கு விசை அழுத்திகளில் பயன்படுத்தப்படும் பொறிப்புக் கட்டை அல்லது படிவ அச்சு

drawing in : நூலிழைத்தல் : வார்ப்பு இழைகளைத் தறியின் பாவு வழியாக நூலிழைத்தல்

drawing of pattern : (வார்.) தோரணி இழுப்பு : வார்ப்பு மணலிலிருந்து ஒரு தோரணியை வெளியில் எடுத்தல்

drawing of temper : எஃகினை செம்பதமாகச் சூடாக்கி, அதனை மெல்ல மெல்ல குளிர்வித்தல். இது கெட்டியாக்கும் அல்லது உறுதியூட்டும் முறைக்கு எதிர்மாறானது

drawing out : நீட்டுதல் : உலோகத்தைச் சூடாக்கி சம்மட்டி கொண்டு அடித்து நீட்டுதல். இதனால் பரப்பளவு வீத அளவுப்படி குழையும்

drawing paper : படம் வரைதாள் : பென்சில், வண்ணக்கோல், பேனா மை இவற்றால் படம் வரைவதற்கு ஏற்ற தாள்

drawing pen : படம் வரை பேனா: வரைவாளர்கள் பயன்படுத்தும் வரை பேனா

draw knife வரைவுக் கத்தி: இரு கை பிடிகள் உடைய மரம் வெட்டும் கருவி. இது குறுகலான நீண்ட கத்தி முனையை உடையது. இரு கைபிடிகளும் கத்திக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும்

draw plate : (வார்.) தோரணி இழுவைத் தட்டம் : ஒரு தோரணியில் வைக்கப்பட்டுள்ள திருகிழைத் துவாரமுள்ள ஒரு தட்டம். இதன் துவாரத்தில் செருகப்படும் மணலிலிருந்து தோரணியை அகற்றுவதற்கு உதவுகிறது

draw screw : (வார்.) இழுப்புத் திருகு : திருகிழைகள் கொண்ட ஒரு சலாகை. இதன் ஒரு முனையில் தோரணியில் தட்டத்தை இழுப்பதற்கான திருகிழையிட்ட துவாரம் இருக்கும்

draw sheet : அச்சு சமனத் தகடு : அச்சுத் தகட்டுப்பாளத்தின் மீதான சமனத் தகட்டின் மேற்படலம். இதனுடன் இயக்கு தண்டுகளும், தடுப்புக் காப்புகளும் இணைக்கப்பட்டிருக்கும்

draw spike : (மர.வே..) இழுவைச்சலாகை : வார்ப்பு மணலிலிருந்து ஒரு தோரணியை இழுத்தெடுப்பதற்குப் பயன்படும் ஒரு கூர்மையான உலோகச் சலாகை

dredge: துர்வாரி : நீரோடையின் படுகையிலிருந்து சேற்றினை அல்லது மணலைத் துாரெடுத்து அகற்றுவதற்குப் பயன்படும் எந்திரம்