பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

drill guage : (எந்.) துரப்பண அளவி: துரப்பணததின வடி வளவினை எளிதாகத் தீர்மானிக்க உதவக்கூடியவாறு முறையாகக் குறியிடப்பட்ட வெவ்வேறு வடிவுகளில் துவாரங்களையுடைய ஒரு தட்டையான எஃகுத் தகடு

drill grinding gauge : (எந்.) துரப்பண அரைவை அளவி : துரப்பணத்தின் வெட்டு இதழ்களின் நீளத்தையும் கோணத்தையும் அளவிடப் பயன்படும் கருவி

drilling jig : (எந்.) துரப்பண இடுக்கி : துவாரங்களைத் துல்லியமாகத் துரப்பணம் செய்வதற்கு உதவும் வகையில் வார்ப்பிரும்பினால் துல்லியமாக வார்க்கப்பட்ட ஒரு சாதனம்

drill motor: (மர.வே..) துரப்பண மின்னோடி : துரப்பண வேலைகளுக்கும், கருவிகளுக்கு மெருகேற்றுவதற்கும் பயன்படும் கையால் இயக்கப்படும் சிறிய மின்னோடி

drill press : (எந்.) துரப்பணத் துளைப் பொறி : உலோகத்தில் துவாரங்களைத் துரப்பணம் செய்வதற்குப் பயன்படும் பல் விணையுள்ள தானியங்கிச் சாதனம்

drill press vise : (எந்.) துரப்பணத் துளைக் குறடு : துரப்பணம் செய்யப்படும் உறுப்புகளைப் பற்றிப் பிடித்துக்கொள்வதற்கு ஒரு துரப்பணத் துளைப்பொறி மேசையில் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகைக் குறடு

drill rod: (எந்.) துரப்பணச் சலாகை : 90 முதல் 100 அலகுடைய கார்பன் ஆதாரத்துடன் 0.0013செ.மீ. வரையில் அளவுடைய மெருகேற்றிய எஃகுச் சாதனம்

drill socket: (எந்.) துரப்பணக் குழி : ஒரு துரப்பணத்தின் கூம்புத் தண்டினை ஏற்றுக் கொள்ளும் துரப்பனக் குழி

drill spindle : (எந்.) துரப்பணக் கதிர்ச் சலாகை : ஒரு துரப்பண எந்திரத்தின் செங்குத்தான கதிர்ச் சலாகை. இது துரப்பணத்தை ஏந்திக் கொண்டு சுழல்கிறது. இதன் செங்குத்தான இய்க்கத்தின் வழியே ஊட்டமைவு இயங்குகிறது

drill vise : (எந்.) துரப்பணக் குறடு : துரப்பணம் செய்ய வேண்டிய பொருளைப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்காக ஒரு துரப்பணத் துளைப்பொறி மேசையில் பயன்படுத்தப்படும் ஒரு குறடு

drip line : (எந்.பொறி.) கசிவுக் குழாய் : ஒரு சூடாக்கும் அமைப்பு முறையில், வெப்பம் பரவுவதன் மூலம் ஏற்படும் செறிமானத்தினால் நீர்மம் மீண்டும் கொதிகலனில் பாய்வதற்கான குழாய்கள்

drip mould ( க. க..) கசிவு வார்ப்பு படம் : ஒரு சுவரின் முகப்பின் வழியே மழைநீர் கசியாமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வார்ப்படம்

drip stone : ( க. க..) கசிவுக்கல் : மழை நீரைச் சன்னலுக்கு அப்பால் விழச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு மேற் கட்டமைவு. இதனைப் 'படிமுகக்கல்' என்றும் கூறுவர்

drive chain : (தானி.) இயக்குச்சங்கிலி:எந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கலைக்கும் சக்கரங்களுக்கு விசையினை வழங்கப் பயன்படும் ஒரு கனமான உருள் சங்கிலி

driven : (எந்.) இயக்குவித்தல் : ஒர் இயக்கியினால் இயக்கப்படும் சக்கரம், சக்கரங்கள் அல்லது கப்பிகள்