பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
237

drive pinion : (தானி.) இயக்குவிசை நுனி : ஒரே இயக்கத்தை இருவேறு இயக்கமாகப் பிரிந்தியக் குவிக்கும் இணைப்பமைவுடன் இணைக்கப்பட்டுள்ள சரிவுப் பல்லிணை

drive : (எந்.) நேர்முக இயக்கச் சக்கரம் : இயக்கிக்கு நேர்முகமாக விசையைச் செலுத்தும் சக்கரம் அல்லது கப்பிகள்

drive punch : இயக்கத் தமரூசி : சம்மட்டியால் அடித்து இயக்கப்படும் எஃகு தமரூசி, இது கப்பற்பாய் முதலியவற்றில் நுண்துளைகளிடுவதற்குப் பயன்படுகிறது

drive screw or screw nail : இயக்குத்திருகு அல்லது திருகாணி: சம்மட்டியால் பொருத்தப்படும் ஒரு வகைத் திருகு. இதனை ஒரு மரையாணி முடுக்கியினால் கழற்றிவிடலாம்

drive shaft : (தானி.) இயக்கு சுழல் தண்டு : இணைப்புகள் மூலம் சக்கரங்களுடன் விசை ஊடிணைப்பியை இன்ணக்கின்ற சுழல் தண்டு

driven pulleys: (உலோ.) இயக்கு கம்பி : இயக்கு கப்பியிலிருந்து விசையினைப் பெறுகிற கப்பி

driving mechanism : (பட்.வே.) இயக்குப் பொறியமைவு : இயக்கத்தைப் பரப்பீடு செய்வதற்குப் பயன்படும் சக்கரங்கள், கப்பிகள், இணைப்பு வார்கள், நெம்புகோல்கள் முதலிய தொகுப்பமைவுகள்

drone : (வானூ.) ஆளியக்கா விமானம் : விமானம் ஒட்டி இன்றி இயக்கப்படும் விமானம். இது சேய்மையிலிருந்து அல்லது தானியக்க முறையில் இயக்கப்படுகிறது. இது இபரும்பாலும் ராணுவத்தில் இலக்குகளைக் குறிபார்த்துத்தாக்கும் பயிற்சிகளிலும், எதிரிகளின் இலக்குகளைத் அழிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது

dorp தொங்கல் மணி : பதக்கம் போன்ற தொங்கல் அணிகலன்

dorp elbow : (கம்..) தொங்கு இயக்க முனை : கட்டிடத்தில் எரிவாயு பயன்படுத்தப்படும் இடத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சிறு கை முட்டுமுனை. இரு இருபுறங்களிலும் சுவரில், முகட்டில் அல்லது சட்டகங்களில் பொருத்துவதற்கு ஏற்ப இறகுகளைக் கொண்டிருக்கும்

drop_ell , (கம்.) தொங்கு முனை: பக்கங்களில் பொருத்து முனைகள் கொண்ட ஒரு முட்டு முனை. இதனை ஓர் ஆதாரத்துடன் இணைத்து விடலாம்

drop-feed oiler : (எந்.) மசகு கிண்ணி : மசகு எண்ணெய் ஊற்றி வைக்கப்படும் கிண்ணி

drop front : சாய்வு முகப்பு :முன் புறமாகச் சாய்ந்துள்ள மேசை

drop hammer : (பொறி..) விழு சம்மட்டி : காய்ச்சி வடித்து வார்ப் படம் உருவாக்கப் பயன்படும் ஒரு கனமான சம்மட்டி

drop handle: (எந்.) தொங்கு கைபிடி  : பதக்கம் போல் தொங்கும் பல்வேறு வடிவிலுள்ள கைபிடிகள்

drop hanger : (எந்.) தூக்குச் சங்கிலி: ஒரு முகட்டுடன் அல்லது ஒரு தூலத்தின் உட்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஊடிணைப்பு ஆதாரம்

drop ornament: தொங்கு ஆடை : தூசாடை போன்று ஒர் உடுப்பு: ஆனால், சட்டத்தின் முழு அகலத்தையும் போர்த்தியிருக்காது