பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

dropout : (வார்.) வார்ப்புச் சிதறல் : வார்ப்படத்தை மூடும் போது மண் தளர்ச்சியுற்றுச் சிதறுதல

drop siding : (க.க..) சாளரப் பலகை : கட்டிடங்களின் புறப்பரப்பின் மீது பயன்படுத்தப்படும் ஒருவகை சாளரப் பலகை

drop tee : (கம்.) டிராம் டீ : தொங்கு இயக்கு முனையைப் போலவே இறகுகளைக் கொண்ட ஒரு சிறிய முகட்டு முனை

drop window : (க.க..) இறக்கு பலகணி : தள்ளு வண்டிகளில் உள்ளது போன்று பலகணிப் படிக் கல்லுக்குக் கீழுள்ள ஒரு குழியினுள் இறக்கக் கூடிய ஒரு பலக்னி

dross : (வார்.) கசடு : உருக்கிய உலோகங்களின் மேற்பரப்பில் மிதக்கும் பொடுகுகள், ஆக்சைடுகள் போன்ற கழிவுப் பொருள்கள்

drum ; (பட்.வே.) : வட்டுருளை : ஒரு சுழல் தண்டின் மீது ஏற்றப் பட்டிருக்கும் உட்புழையுள்ள நீள் உருளை விசையினை_வார்ப்பட்டைகள் அல்லது கம்பி வடங்கள் மூலம் கொண்டு செல்வதற்குப் பயன்படுகிறது

drum armature : (மின்..) உருளை மின்னகம் : இயங்கும் மின்னகங்கொண்ட ஒரு நேர் மின்னாக்கி. இதில் கம்பிச் சுருள்கள் நீளவாக்கில் அல்லது அதன் அச்சுக்கு இணையாகச் சுற்றப்பட்டிருககும்

drum switch : (மின்..) சுழல் விசை : நீள் உருளை வடிவிலான சுழலும் விசை

drum winding : (மின்..) சுழல் சுருணை : மின்னாக்கியின் மின்னகத்தில் சுருணை செய்யும் ஒரு முறை. இதில், மின் கடத்திகள் மின்னகத்தின் மேற்பரப்பின் அருகே இயைவடுப்பள்ளங்களில் அமைந்திருக்கும்

dry air: (குளி.ப.த.) வறள் காற்று: நீராவி இல்லாத வெறுங்காற்று

dry battery : (மின்..) பசை மின் கலத் தொகுதி: உலர்ந்த வேதி மின் கலத் தொகுதியின்ைக் கொண்ட ஒரு மின்கல அடுக்கு.இச்சொல் சில சமயம் ஒற்றை உலர் மின்கலத்தைக் குறிக்க தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது

dry cell : (மின்.) பசை மின்கலம்: திரவ மின் பகுப்பான் பயன்படுத்தப்படாத ஒர் அடிப்படை மின் கலம். இதில் திரவம் இல்லாதிருப்பதால் இதனை எந்த நிலையிலும் பயன்படுத்தலாம்

dry disk clutch : (தானி..) உலர் வட்டு ஊடிணைப்பி: இதில் இயக்கு வட்டுகள் இரு புறங்களிலும் ஒர் உராய்வுப் பொருளால் மூடப்ப்ட்டிருக்கும். எஞ்சினின் சமனுருள் சக்கரத்துடன் பொருத்தப்பட்டி ருக்கும் ஊடிணைப்பி வளையத்திலுள்ள விசைகள் மூலம் இவை இயக்கப்படுகின்றன. இதில் ஊடிணைப்பி முகப்புகளில் எண்ணையோ பசையோ படக் கூடாது என்பதால் 'உலர்' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது

dry friction : (தானி.) வறள்: உராய்வு : மசகிடப்படாத வறண்ட்_மேற்பரப்புகளுக்கிடையிலான இயக்கத்திற்கு ஏற்படும் தடை

dry fuel rocket : விண் உலர் எரிபொருள் ராக்கெட்டு : விரைவாக எரியும் தூள் கலவையைப் பயன்படுத்தும் ஒரு ராக்கெட்டு

dry grinding : உலர் மாவரைத்தல் : நீர் அல்லது பிற குளிர் திரவமின்றி மாவரைத்தல்