பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

drying oil : (குழை.) உலரும் எண்ணெய் : காற்றுப்பட்டே எளிதில் கெட்டியாகக் கூடிய மரப்பூச்செண்ணெய் அல்லது பெரில்லா போன்ற தனிவகை எண்ணெய்

drying rack : (அச்சு,) உலர்த்து அடுக்கு : அச்சிட்ட காகிதங்களை உலர்த்துவதற்குப் பயன்படும் ஒர் அடுக்கு அல்லது சட்டகம்

dual ignition : இரட்டை மூட்டம்  : இரு ஆதாரங்களிலிருந்து மின்னோட்ட்த்தைக் கொண்டிருக்கிற, ஒரே தொகுதி. பொறிவினை முனைகளைப் பயன்படுத்துகிற ஒர் மூட்ட அமைப்பு. ஒவ்வொரு நீள் உருளையிலும் ஒரே சமயத்தில் தீ மூட்டுகிற இரட்டைப் பொறிவினை முனைகளைக் கொண்ட ஒரு மூட்ட அமைப்பையும் குறிக்கும்

dubbing : (மின்.) ஒலி இணைப்பு: திரைப்படத்திற்கு வேறு மொழியில் புதிய ஒலிப்பதிவை இணைத்தல்; இயக்கத் திரைப்படத்துடன் ஒலிப்பதிவு இணைத்தல்

duct (குளி, பத.) கம்பி வடக் குழாய் : காற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் உலோகக்கம்பிவடக் குழாய்

ductile : (உலோ) நெகிழ் திறன்: உலோகங்களில் எளிதில் கம்பியாக இழுத்து நீட்டுவதற்கான நெகிழ்வுத் திறன்

ductless glands :(உட.) நாளமில்லாச் சுரப்பிகள் : இழைநாளமில்லாமலேயே நேரடியாகக் குருதிக்குள் கசிவுநீர் பரப்பும் சுரப்பிகள்

ductility : ஒசிவுத்திறன் : உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்குவதற்கு ஏற்ற தன்மை, உலோகத்தைக் கம்பியாக நீட்டுவது இதற்கு எடுத்துக்காட்டு

dull coated paper : (அச்சு.) மழுங்கல் மெருகுத்தாள் : மெருகேற்றாத வளவள்ப்பான எனாமல் காகிதம்

dull finish paper : (அச்சு.) மெருகற்ற தாள் : பளபளப்பாக மெருகேற்றாத பரப்புடைய காகிதம்

dull iron: (வார்.) மழுங்கல் இரும்பு: ஊற்றுவதற்கு மிகவும் உதந்ததாக இருக்கும் அளவுக்கு நன்கு சூடாகாத இரும்பு

dumb waiter : ( க.க..) சுழல் நிலை மேடை : பரிமாறுபவரின் தேவையில்லாமல் உணவு முதலியவற்றைப் படைக்க உதவும் நகரக் கூடிய சுழலுசசி மேடையையுடைய ஒரு நிலைதாங்கி

dummy : (அச்சு.) அச்சிடாப் போலி வெள்ளேடு : அச்சுப் பார்வைப் படிகளிலிருந்து துணுக்குகளை ஒட்டி அச்சிடுவதற்காக உருவாக்கிய போலி வெள்ளேட்டு உருவமைப்பு அச்சிடாத கவற்றுக் காகிதங்களைத் தைத்துப் புத்தகத்தின் உரு மாதிரியில் வடிவமைத்த நூல் படிவம்

dumpy levels: (எல்..) காட்சித் தள மட்டம்: தொலைநோக்கியுடன் மட்டத் தொடர்பில் இணைக்கப்பட்டுள்ள அளவாய்வாளரின் காட்சித் தளமட்டம்

duplex cable: (மின்.) இருமடிக் கம்பிவடம்: ஒரு மின்காப்பு உறையினுள், ஒன்றையொன்று தொடாதவாறு மின்காப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இரட்டைக் கம்பிகள்

duplex gas-burner:இரட்டை வாயு விளக்கு : இரு பீற்றின் ஒரு சுடரான வாயு விளக்கு

duplex lamp: இரு திரி விளக்கு :