பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
242

தட்டையாக இருக்கும். ஒரு பிணைப்புக் கவான் இதில் செங்கற்கள் ஒரு பொதுவான் மையத்திலிருந்து சாய்வாக அடுக்கப்பட்டிருககும்

Dutch bond, or English cross bond : டச்சுப் பிணைப்பு அல்லது ஆங்கிலக் குறுக்குப் பிணைப்பு : செங்குத்துச் செங்கற்களும், நீளவாட்டுக் கிடைச் செங்கற்களும் மாற்றிமாற்றி அமைக்கப்பட்டுள்ள் ஒருவகைக் கவிகைப் பிணைப்பு

dutch metal : டச்சு உலோகம் : மிகுந்த நெகிழ்திறனுடைய உலோ கக்க்லவை. இதில் 11 பகுதி செம்பும்,இரு பகுதி துத்தநாகமும் கலந் திருக்கும்

dwell : (தானி.) தொடர்பறு காலம் : இருமுனைகளின் தொடர் பினைத் துண்டிக்கும் கால அளவு. வளைகோல் வடிவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது

dwelling : (க.க.) குடியிருப்பு : குடியிருக்கும் வீட்டினை அல்லது உறைவிடத்தைக் குறிக்கும் ஒரு விரிவான பொருள்கொண்ட சொல்

dye : (1) சாயந்தோய்த்தல். (2) வண்ணக் கறைப்படுத்துதல், (3) சாயப் பொருள்; சாயந் தோய்க்கப் பயன்ப்டும் சாயப்பொருள்.

dye wood : சாய மரம் : சாயந் தோய்ப்பதற்கான வண்ணப்பொருள் தரும் ஒருவகை மரம்.

dyna-flow transmission : (தானி.எந்.) இயங்கு பாய்வுச் செலுத்திடு : இதில் ஒரு நீரியல் ஒரு போக்கியும், நிலை திறப்புப் பல்லிணைத் தொகுதியும் அமைந்திருக்கும். இதனால், ஓட்டுநர், நேரடியாக ஓட்டவும், நெருக்கடி நிலையில் மெதுவாக ஓட்டவும்.பின்னோக்கி ஓட்டவும், இயங்கா நிலையில் நிறுத்தவும் முடிகிறது

dynamic balance : (தானி.) இயக்கச் சமநிலை : உறுப்புகள் எந்த வேகத்தில் சுழல்வதற்கெனச் சமநிலைப் படுத்தப்பட்டுள்ளனவோ அந்த வேகத்தில் அதிர்வு இன்றிச் சுழல்வதற்கு அனுமதிக்கும் சமநிலை அமைப்பு

dynamic factor : (வானூ) இயக்க காரணி : ஒரு விமானம் வேகம் எடுக்கும்போது, அதன் உறுப்பு எதுவும் தாங்கும் பளுவிற்கும், அதற்கு நேரிணையான அடிப்படைப் பளுவிற்குமிடையிலான விகிதம்

dynamic lift : (வனூ.) இயக்க எழுச்சி : விமானம் பறக்கும்போது அதன்மீது செயற்படும் நான்கு விசைகளில் ஒன்று. இந்த எழுச்சி விசை விமானத்தை உயரத்தில் நிலைத்து நிற்கச் செய்கிறது

dynamic load : (வானூ.) இயக்கப் பளு : விமானத்தின் வேக முடுக்கம் காரணமாக உண்டாகும் பளு. இந்த இயக்கப் பளுவானது. விமானத்தின் பொருண்மைக்கு வீத அளவில் அமைந்திருக்கும்

dynamic pressure : (வானூ.) இயக்க அழுத்தம் : 1/2 PV2 என்ற சூத்திரத்தின் பெருக்குபலன். இதில் P- காற்றின் அடர்த்தி.V 2 காற்றின் ஒப்புவேகம்

dynamics : விசையியக்கவியல் : இயக்க ஆற்றல் இயக்கத்தாக்கு ஆற்றல் ஆகியவற்றையும் ஆராயும் இயற்பியலின் இயக்கவியல் சார்ந்த துறை

dynamic speaker : இயக்க ஒலி பெருக்கி : ஒலி அதிர்வு ஓட்டங்களை ஒலியலைகளாக மாற்றக் கூடிய ஒரு கருவி. இதில் ஒரு மின்காந்தப் புலம் அமைந்திருக்கும்