பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
243

அதில், ஒரு பிரிசுவருடன் இணைக்கப்பட்டுள்ள நகரும் ஒலிச்சுருள் வைக்கப்பட்டிருக்கும்

dynamic, stability : (வானூ.) இயக்க உறுதி நிலை : ஒரு விமானம் பறக்கும்போது அதன் சீராக இயக்கம் சீர்குலையுமானால் அதனை உறுதி நிலைக்குக் கொண்டு வருவதற்கான உறுதிப் பாட்டு நிலை

dynamite : சுரங்க வெடி : நைட்ரோ கிளிசரின் என்னும் வெடி மருந்து வகை

dynamiting : (மின்.) பளுவேற்றுதல் : பட்டுத் துணிகளுக்கு கனிம உப்புகள் மூலம் பளுவேற்றுதல்

dynamo : (மின்.) நேர் மின்னாக்கி : காந்தச் சூழுறவில் செப்புக் கம்பி களைச் சுழற்றுவதன்மூலம் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் எந்திரக் கருவி

dynamometer : (மின்.) திறன்மானி : பணியில் செலவிடப்படும் ஆற்றலின் அளவினை அளவிடுவித்ற்கான ஒரு கருவி அல்லது எந்திரம்

dynamometer : (குளி.பதன.) திறன்மானி : ஒரு மின்னோடியின் அல்லது எஞ்சினின் திறனை அளந்து கணிக்கும் கருவி

dynamotor : (மின்.) விசையியக்க மின்னோடி : ஒரே மின்னகத்தில் இரு சுருணைகளாய் பயன்படுத்தும் ஒரு மின்னோடி-மின்னாக்கி இணைப்பு. இது மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது

dyne : (இயற்.) நொடி விசையழுத்தம் : ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசையாற்றல் அலகு

dynode : (மின்.) வெற்றிடக் குழல் மின் முனை : ஒரு வெற்றிடக் குழலிலுள்ள் மின்முனை. இது எதிர்மின் உமிழ்வினைச் செய்வதன் மூலம் ஒரு பயனுள்ள பணியைச் செய்கிறது

dysentery : (நோயி.) சீதபேதி : சீழும் இரத்தமுமாக மலம் போகும் வயிற்று அளைச்சல் நோய்