பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
247

வண்டிகளில் பயன்படுத்துவதற்காக எடிசன் தயாரித்த ஓர் இரு உலோக மின்கலம். இதில் நேர்மின் தகடு நிக்கல் பெராக்சைடினாலும், எதிர்மின் தகடு இரும்பினாலும் அமைந்திருக்கும்

effective area : (வானூ.) பயன் முனைப்புப் பரப்பிடம் : ஒரு திருகு அலகின் பயன் முனைப்புப் பரப்பிடம் என்பது, அந்த அலகினைச் சம தளத்தில் அதன் அச்சுக்குச் செங்கோணத்தில் உருவரை செய்வதால் உண்டாகும் பரப்பிடம் ஆகும்

effective conductance : (மின்.) பயனுறு கடத்துத் திறன் : ஒரு மாற்று மின்னோட்ட மின்சுற்றில் மொத்த மின்னியக்க விசைக்கும், அதன் விசையாற்றல் பகுதிக்குமிடையிலான விகிதம்

effective current : (மின்.) பயனுறு மின்னோட்டம் : அம்மீட்டரில் குறிக்கப்படும் மின்னோட்ட வலிமை

effective helix angle : (வானூ.) விளைவுறு திருகு சுழல் கோணம் : விமானம் காற்றினூடே முன்னோக்கிச் செல்லும்போது அதன் முற்செலுத்து அலகிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஏற்படும் திருகுசுழல் கோணம்

effective horse - power : (பொறி.) விளைவுறு குதிரைத் திறன் : ஒர் எஞ்சின் அளிக்கக் கூடிய பயனுறு ஆற்றலின் அளவு

effective landing area : (வானூ.) பயனுறு தரையிறங்கு பரப்பிடம் : விமானம் தரையிறங்கும் போதும், தரையிலிருந்து மேலேறும்போதும் அதன் ஏற்ற, இறக்கக் கோணங்களுக்குப் பாதுகாப்பான அளவுக்குக் கிடைக்கக் கூடிய தரைப் பரப்பின் பகுதி

effective propeller pitch : (வானூ.) பயனுறு முற்செலுத்து வீச்சு : முற்செலுத்தி ஒரு முறை சுழலும்போது விமானம் முன்செல்லும் தூரத்தின் அளவு

effective propeller thrust : (வானூ.) பயனுறு முற்செலுத்து அழுத்தம் : விமானத்தின் முற்செலுத்தியினால் உண்டாகும் நிகர இயக்க விசை

effective resistance : (மின்.) பயனுறு தடை : ஒரு மின்சுற்று வழியில், உள்ளபடி ஈர்த்துக் கொள்ளப்படும் விசைக்கும், அதில் பாயும் பயனுறு மின்னோட்டத்தின் வர்க்கத்திற்குமிடையிலான விகிதம்

effective value : (மின்.) பயனுறு மதிப்பு : ஒரு மாற்று மின்னோட்டத்தின் மதிப்பு அல்லது மின்னழுத்த அளவு. இது மின்சுற்றில் இணைக்கப்பட்டுள்ள அம்மீட்டரில் குறித்துக் காட்டப்படும்

effer-vescence : நுரைத்தெழுச்சி : ஒரு திரவம் கொதிக்கும் போது அல்லாமல் பிறவாறு அதிலிருந்து வாயு குமிழியிட்டுப் பொங்கி எழுதல்

efficiency : திறம்பாடு :எந்திரத்தில் இயக்காற்றல் மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு

efflorescence : (வேதி.) பொடியார்ந்த மேற்படலம் : திறந்தவெளிக்காட்டுப் பொருட்களின் மீது பொடிப் பொடியாகக்கூடிய மேற்படலம் உருவாதல்.நிலஞ்சுவர்ப் பரப்புகள் வகையில் உப்புப் பொலிவுறுதல்

eggshell finish : வெண்மெருகு : முட்டையின் வெண்தோட்டினைப் போன்ற காகித மேற்பரப்பில் மெருகேற்றுதல்

ejector pin : (குழை.) வெளியேற்றுமுனை : ஒரு வார்ப்படத்திலி